திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகடந்த 800 ஆண்டுகளாக ஒவ்வொரு திருத்தந்தையும் தங்களுக்கென தனிப்பட்ட ஒரு ஆட்சி முத்திரையைத் திருப்பீட அதிகாரத்தைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தி வருகின்றனர்,[1] திருத்தந்தை நான்காம் இன்னசென்ட் (1243-1254) முதல் முதலில் ஆட்சி முத்திரையைப் பயன்படுத்தினார் என்பர். அதற்கு முன் இருந்த திருத்தந்தையர் பண்புசார் முத்திரைகளை (Attributed arms) பயன்படுத்தினர்.[2] பதினாறாம் பெனடிக்டைத் தவிர மற்ற திருத்தந்தையரின் ஆட்சி முத்திரைகளில் தங்க மும்முடி இருக்கும். பதினாறாம் பெனடிக்ட் இதனை நீக்கிவிட்டு ஆயரின் தலைப்பாகை (mitre) மற்றும் பாலியம் (pallium) ஆகியவற்றை வைத்தார். பாரம்பரியமாக திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகளில் தங்கம் மற்றும் வெள்ளியாலான இரு சாவிகள் இருக்கும். விண்ணுலகிலும் (தங்கம்) மற்றும் மண்ணுலகிலும் (வெள்ளி) அனுமதிக்கவும், தடைசெய்யவும் திருத்தந்தைக்கு உள்ள அதிகாரத்தைக் குறிக்கும். இக்கோட்பாடு மத்தேயு 16:18-19 -ஐ ஆதாரமாகக் கொண்டது :
அதனால் திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள், கிறித்துவின் பிரதிநிதியாக இவ்வுலகில் திருத்தந்தையருக்கு இருக்கும் ஆன்மீக அதிகாரத்தைக் குறிக்கும். திருத்தந்தையர்களின் ஆட்சி முத்திரைகள்
தொடர்புடைய சின்னங்கள்
ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia