புதுமைப் பெண் (1984 திரைப்படம்)
புதுமைப் பெண் (Pudhumai Penn) 1984 ஆம் ஆண்டில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] பாண்டியன், ரேவதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ராஜசேகர் இப்படத்தில் எதிர் நாயகனாக அறிமுகமானார். ஏவிஎம் தயாரித்த இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். கதைச் சுருக்கம்பிராமணப் பெண்ணான ரேவதியை வங்கி ஊழியரான பாண்டியன் காதலித்து திருமணம் செய்கிறார். ஏழை வீட்டுப் பெண்ணான ரேவதியை பாண்டியனின் தாயிக்கு பிடிக்கவில்லை. ரேவதியை காணவரும் அவரின் தந்தை அவரிடம் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்து இதிகாச புனித நூல்களைத் தந்து இதிகாச காலத்து பத்தினி பெண்களைப் போல வாழுமாறு அறிவுரை கூறிச் செல்கிறார். பாண்டியன் பணியாற்றும் வங்கியின் மேலாளரான ராஜசேகர் ஒரு காமுகன். அவனுக்கு ரேவதி மிது ஒரு கண், இந்நிலையில் வங்கியில் பண பரிமாற்றத்தின்போது ஏற்பட்ட ஒரு சிக்கலால் கணக்கில் பணம் குறைகிறது இதற்கு காரணம் பாண்டியன் என்று குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு சிக்கலுக்கு ஆளாகிறார். இந்த சமயத்தை பயன்படுத்தி ராஜசேகர் பாண்டியனிடம் அவனுக்கு சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்வதாகவும் அதற்கு விலையாக ரேவதியுடன் உறவு கொள்ள அனுப்புமாறு கேட்கிறான். இதனால் கோபமுற்ற பாண்டியன் மேலாளரை தாக்குகிறார். மேலாளரை கொண்ற குற்றத்துக்கு பாண்டியன் கைது செய்யப்படுகிறார். இதன் பிறகு தன் கணவன் பாண்டியனைச் சிறையிலிருந்து விடுவிக்கப் படாத பாடு படுவார் ரேவதி. வெளியே வரும் கணவன் தனது நடத்தையைச் சந்தேகப்படும்போது, தன் தந்தை தந்த இந்து புனித நூல்களை குழிதோண்டி புதைத்துவிட்டு புயலாகப் பொங்கி எழுந்து படிதாண்டுவார். நடிகர்கள்
பாடல்கள்இப்படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும், பின்னணி இசையையும் இளையராஜா உருவாக்கியிருந்தார்.[3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia