ராய்ப்பூர், சத்தீஸ்கர்
ராய்ப்பூர் இந்தியாவிலுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது ராய்ப்பூர் மாவட்டத்தின் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். 2001 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்படுவதற்கு முன்பு இது மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ராய்ப்பூரின் கிழக்குப்பகுதியில் மகாநதியானது பாய்கிறது. இதன் தெற்குப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாகும். ராய்ப்பூர் இந்தியாவின் மிகப்பெரிய இரும்புச் சந்தைகளில் ஒன்றாகும். 2011 ஆம் ஆண்டில் ராய்ப்பூர் மாநகராட்சிப் பகுதியின் மக்கள்தொகை 1,010,087.[2] இதனருகில் புதிய தலைநகரான நயா ராய்ப்பூர் கட்டப்பட்டுவருகிறது. மக்கள்தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இராய்ப்பூர் மாநகராட்சியின் மொத்த மக்கள்தொகை 10,27,264 ஆகும். மக்கள்தொகையில் 6 வயதிற்குட்பட்டோர் 1,28,665 ஆகயுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆயிரம் ஆண்களுக்கு 948 பெண்கள் வீதம் உள்ளனர். எழுத்தறிவு 85.95% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 87.62%, இசுலாமியர்கள் 7.17%, கிறித்தவர்கள் 1.51%, சீக்கியர்கள் 1.43%, சமணர்கள் 1.40%, பௌத்தர்கள் 0.71% மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர். [5] குறிப்பிடத்தக்க நபர்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia