அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி
அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி (अनंतनाग विधान सभा) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீரின் சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும்.இத்தொகுதியானது அனந்த்நாக்-ரசௌரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[2] தேர்தல் முடிவுகள்20082008 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 12,439 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[3] 20142014 இல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் முப்தி முகமது சயீது 16,983 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[4][5] 20162016 இல் நடைபெற்ற அனந்த்நாக் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் கிலால் அகமது ஷாவை விட 12,000 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் மக்களின் சனநாயக கட்சி வேட்பாளர் மெக்பூபா வெற்றி பெற்றார். சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் இப்திகார் மிசுகர் 2,702 வாக்குகள் பெற்று மூன்றாவது இடம் பெற்றார். [6] 20242024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளர் பீர்சதா முகமது சையது 6679 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[7] சட்டப்பேரவை உறுப்பினர்கள்
மேலும் காண்ககுறிப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia