பிலாவர் சட்டமன்றத் தொகுதி (Billawar Assembly constituency) என்பது இந்தியா வட மாநிலமான சம்மு-காசுமீர் சட்டமன்றத்தில் உள்ள 90 தொகுதிகளில் ஒன்றாகும். பிலாவர், உதம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும். [1][2][3]
2014 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், பிலாவர் தொகுதியில் பாரதிய சனதா கட்சியின் நிர்மல் சிங் 43,447 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் மனோகர் லால் சர்மா 25,472 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். சம்மு காசுமீர் தேசிய சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் ரோமி கசூரியா 3,084 வாக்குகள் பெற்றார்.[4]
2024 இல் நடைபெற்ற சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில் பாரதிய சனதா கட்சி வேட்பாளர் சதீசு குமார் சர்மா, பிலாவர் தொகுதியில் 44629 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5]
Kembali kehalaman sebelumnya