கப்பா கதல் சட்டமன்றத் தொகுதி
கப்பா கதல் சட்டமன்றத் தொகுதி (हब्बा कदल विधानसभा) என்பது இந்தியாவின் வட மாநிலமான சம்மு காசுமீரின் சம்மு காசுமீர் சட்டப் பேரவையின் 90 தொகுதிகளில் ஒன்றாகும். கப்பா கதல் சிறநகர் மக்களவைத் தொகுதியிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.[1] [2] [3] தேர்தல் முடிவுகள்20142014 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டப் பேரவைத் தேர்தலில், கப்பா கதல் தொகுதியில் சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சியின் வேட்பாளர் சமிம் ஃபிர்தௌஸ் 4,955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 2,596 வாக்குகள் பெற்று பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் மோதி கவுல் இரண்டாம் இடத்தையும். சம்மு காசுமீர் மக்கள் சனநாயகக் கட்சியின் வேட்பாளர் சாஃபர் மெராஜ் 992 வாக்குகளுடன் மூன்றாவது இடமும், இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளர் ராமன் மட்டூ 973 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தையும் பெற்றனர்.[4] 20242024 இல் நடந்த சம்மு காசுமீர் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் அசோக் குமாரை விட 12437 வாக்குகள் அதிகம் பெற்று சம்மு காசுமீர் தேசிய மாநாட்டு கட்சி வேட்பாளர் சமிம் ஃபிர்தௌசு கப்பா கதல் தொகுதியில் வென்றார்.[4] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia