அம்மைநாயக்கனூர்
அம்மைநாயக்கனூர் (ஆங்கிலம்:Ammainaickanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதனருகே 1.5 கி.மீ. தொலைவில் கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் உள்ளது. அமைவிடம்அம்மையநாயக்கனூர் பேரூராட்சி, நிலக்கோட்டையிலிருந்து 8 கி.மீ.; திண்டுக்கல்லிருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு19 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும் கொண்ட இப்பேரூராட்சி நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,983 வீடுகளும், 19,257 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 80.1% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 980 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 951 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,432 மற்றும் 23 ஆகவுள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia