அய்யலூர்
அமைவிடம்திண்டுக்கல் - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்த அய்யலூர் பேரூராட்சி, திண்டுகல்லிருந்துயிலிருந்து 25 கி.மீ.; வேடசந்தூரிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு21 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 52 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வேடசந்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,824 வீடுகளும், 17,100 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 61.6% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 961 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 915 மற்றும் 6 ஆகவுள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia