சேவுகம்பட்டிசேவுகம்பட்டி (ஆங்கிலம்:Sevugampatti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி திண்டுக்கல்லிருந்து கிழக்கே 33 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சேவுகம்பட்டி பேரூராட்சி 7 உட்கடை கிராமங்களை கொண்டது. வத்தலக்குண்டு – தாண்டிக்குடி வழியாக செல்லும் சாலையில் உள்ள மு.வாடிப்பட்டியில், சேவுகம்பட்டி பேரூராட்சியின் அலுவலகம் அமைந்துள்ளது. [1] 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 11,730 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 10.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,037 வீடுகளும், 11,730 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 76.4% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 983 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 976 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,822 மற்றும் 3 ஆகவுள்ளனர்.[5] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia