சோடியம் பாசுபைடு
சோடியம் பாசுபைடு (Sodium phosphide) என்பது Na3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிறமான இச்சேர்மம் பெரும்பாலும் P3− எதிர்மின் அயனியின் Na+ நேர்மின் அயனி உப்பு என்று விவரிக்கப்படுகிறது [2]. அதிமான வினைத்திறம் கொண்ட பாசுபைடு எதிர்மின் அயனி தயாரிப்புக்கு இச்சேர்மமே ஆதரமாகும். சோடியம் பாசுப்பேட்டுடன் இதை இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. சோடியம் பாசுபைடுடன் கூடுதலாக ஐந்து இருபடி சேர்மங்கள் அறியப்படுகின்றன. அவை
கட்டமைப்புசோடியம் பாசுபைடு சேர்மம் ஒரு அறுகோண மையக்கருத்தில் படிகமாகிறது, இது பெரும்பாலும் சோடியம் ஆர்சனைடு அமைப்பு என்று அழைக்கப்படுகிறது [3]. பொட்டாசியம் பாசுபைடு போலவே திண்மநிலை சோடியம் பாசுபைடு ஐந்து ஒருங்கிணைவு பாசுபரசு மையங்களை கொண்டிருக்கிறது [1]. தயாரிப்புசோடியம் பாசுபைடின் முதல் தயாரிப்பு 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது. பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் அலெக்சாண்ட்ரே பாட்ரிமோன்ட்டு என்பவர் உருகிய சோடியத்தை பாசுபரசு பென்டாகுளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் சோடியம் பாசுபைட்டை தயாரித்தார் [4]. சோடியம் பாசுபைடு தயாரிக்க பல்வேறு வழிகள் விவரிக்கப்பட்டுள்ளன. அதன் எரியக்கூடிய தன்மை மற்றும் நச்சுத்தன்மை காரணமாக, சோடியம் பாசுபைடும் இதனுடன் தொடர்புடைய உப்புகளும் பெரும்பாலும் தளத்திலேயே தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளை பாசுபரசு சோடியம்-பொட்டாசியம் உலோகக் கலவையால் ஒடுக்கப்படுகிறது :[5].
பாசுபரசு ஓர் உயரழுத்த வெப்பக் கருவியில் சோடியத்துடன் 150 பாகை செல்சியசு வெப்பநிலையில் வினைபுரிந்து சோடியம் பாசுபைடை உருவாக்குகிறது [6]. மாறாக இவ்வினை சாதாரண அழுத்த நிலைகளில் நடத்தப்படலாம், ஆனால் வெப்பநிலை சாய்வை பயன்படுத்தி சோடியத்துடன் வினைபுரியச் செய்து ஆவியாகாத Na x P நிலைகளை (x <3) உருவாக்கலாம் [7]. சில சந்தர்ப்பங்களில், நாப்தலீன் போன்ற எலக்ட்ரான் பரிமாற்ற முகவர் பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய பயன்பாடுகளில், நாப்தலீன் கரையக்கூடிய சோடியம் நாப்தலீனைடை உருவாக்குகிறது, இது பாசுபரசைக் குறைக்கிறது. பயன்கள்அதிக வினைத்திறம் கொண்ட பாசுபைடு எதிர்மின் அயனிக்கு சோடியம் பாசுபைடு ஆதார மூலமாகும். அனைத்து கரைப்பான்களிலும் இந்த பொருள் கரையாது, ஆனால் அமிலங்கள் மற்றும் தொடர்புடைய மின்னணுமிகுபொருட்களுடன் ஒரு குழம்பாக வினைபுரிந்து PM 3 வகையின் வழிப்பெறுதிகளைக் கொடுக்கிறது :[5]:
டிரைமெதில்சிலில் வழிப்பெறுதி எளிதில் ஆவியாகும். இதனுடைய கொதிநிலை 0.001 மில்லிமீட்டர் பாதரச அழுத்தத்தில் 30-35 பாகை செல்சியசு வெப்பநிலையாகும். மேலும் இது கரையக்கூடியது. தளத்தில் உருவாக்கப்பட்ட சோடியம் பாசுபைடை சூடான என் -என்’ டைமெத்தில்பார்மமைடில் கரைக்கப்பட்ட இண்டியம்(III)குளோரைடுடன் சேர்த்து சூடுபடுத்தினால் ஒரு குறைக்கடத்தியான இண்டியம் பாசுபைடு உருவாகிறது. இந்த செயல்முறையில் சோடியம் உலோகம் வெண் பாசுபரசுடன் சேர்க்கப்பட்டு பாசுபைடு வினையாக்கி உருவாக்கப்படுகிறது. இது உடனடியாக இண்டியம் உப்புடன் வினையில் ஈடுபடுகிறது [8].
சோடியம் பாசுபைடு வர்த்தக முறையில் துத்தநாக பாசுபைடு மற்றும் அலுமினியம் பாசுபைடு ஆகியவற்றுடன் ஒரு வினையூக்கியாகச் சேர்க்கப்பட்டு பலபடி உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது. பாதுகாப்புசோடியம் பாசுபைடு நீராற்பகுப்பின் போது நச்சு மிக்க பாசுபீன் வாயுவை வெளியிடுவது மிகவும் ஆபத்தானது, இந்த செயல்முறை மிகவும் அதிகமானஒரு வெப்ப உமிழ்வு வினையாகும். இதன் விளைவாக தீ விபத்து ஏற்படுகிறது. தீ மற்றும் நச்சு அபாயங்கள் காரணமாக பயணிகள் விமானத்தில் கொண்டு செல்வதை அமெரிக்க போக்குவரத்து துறை தடைசெய்துள்ளது [9]. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia