இபான் மக்கள்
இபான் மக்கள் அல்லது கடல் டயாக்குகள் (மலாய்: Orang Iban; ஆங்கிலம்: Iban People; சீனம்: 伊班族) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் உள்ள டயாக் மக்களின் ஒரு பிரிவு மக்களாகும். இபான் வம்சாவழியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடல் டயாக்குகள் (Sea Dayaks) என்று அறியப் படுகிறார்கள். டயாக் எனும் சொல் மேற்கத்தியர்களால் வழங்கப்பட்ட சொல். தலை வேட்டையாடுதல் (headhunting) எனும் காட்டுவாசிப் பழக்கத்திற்கு இபான்கள் புகழ் பெற்றவர்கள். மேலும் துணிச்சலுடன் எதிர்த்துப் போரிடும் குணம் கொண்ட பழங்குடியினராகக் கருதப் படுகிறார்கள். பொது![]() ஐரோப்பியர்களின் வருகை; மற்றும் அடுத்தடுத்த காலனித்துவ ஆட்சிகள்; போன்றவற்றினால் கடல் டயாக்குகளின் தலையை வேட்டையாடும் பழக்கம் படிப்படியாக மறைந்து விட்டது. இருப்பினும் இன்றும் பல பாரம்பரியப் பழங்குடி பழக்க வழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. மலேசியாவில் சரவாக் மாநிலம்; புரூணை; மற்றும் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் மாநிலம் போன்ற நிலப் பகுதிகளில் இபான் மக்கள் வாழ்கின்றனர். மேற்கு கலிமந்தானில் ரூமா பாஞ்சாங் எனப்படும் நீண்ட வீடுகளில் வாழ்கின்றனர்.[5][6] ரூமா பேத்தாங் நீள வீடுகள்இந்த நீள வீட்டை, இந்தோனேசிய மொழியில் 'ரூமா பேத்தாங்' (rumah betang) என்றும்; மலாய் மொழியில் 'ரூமா பாஞ்சாங்' (rumah panjang) என்றும் அழைக்கிறார்கள்.[7] அவர்களைப் பற்றிய தொன்ம ஆய்வுகள்; பழைய புராணங்களின் படி, இபான் மக்கள் வரலாற்று ரீதியாக போர்னியோவில் உள்ள கபுவாஸ் ஆற்றுப் பகுதியில் (Kapuas river) இருந்து வந்தவர்கள் என்று அறியப் படுகிறது. ஆனாலும் அவர்கள் இந்தோனேசியாவைப் பூர்வீகமாகக் கொன்டவர்கள்.[8] ஸ்ரீ அமான் நதிப்படுகைகாலப் போக்கில் இவர்கள் மெதுவாகச் சரவாக் நகர்களுக்குள் வந்து சேர்ந்தனர்.[9] இந்தப் பழங்குடியினரில் சிலர் ஸ்ரீ அமான் நதிப் படுகையில் குடியேறினார்கள்.[10] ஜேம்சு புரூக் ஆட்சியின் போது, இபான் பழங்குடியினர் சரவாக் உள்நாட்டிற்குள் மேலும் ஊடுருவினர். அங்கு ஏற்கனவே இருந்த பல உள்ளூர் பழங்குடியினருடன் மோதலில் ஈடுபட்டனர்.[11] காலப் போக்கில் உள்ளூர் மக்களுடன் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். ஜேம்சு புரூக் காலத்தில் அவர்களின் மனிதத் தலை வேட்டையாடும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப் பட்டது. மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia