செலாக்கோ மக்கள்
![]() செலாக்கோ அல்லது செலாக்கோ மக்கள் (மலாய்: Kaum Selako; ஆங்கிலம்: Selako People அல்லது Selakau People) என்பவர்கள் இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) சம்பாசு பிராந்தியத்தில் (Sambas Regency) உள்ள செலாகாவ் மாவட்டம் (Selakau District) மற்றும் செலாகாவ் திமோர் மாவட்டம் (Selakau Timur District); ஆகிய மாவட்டங்களைப் பூர்வீகமாகக் கொண்ட பழங்குடி மக்கள் ஆகும்.[3] இருப்பினும் தற்போது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள லுண்டு மாவட்டத்திலும் (Lundu District) செலாக்கோ மக்கள் அதிகமாய் உள்ளனர்.[4] பொதுசில வேளைகளில் செலாக்கோ மக்கள்; பெரும் தயாக்கு மக்கள் சமூகத்தின் (Larger Dayak People) ஒரு பகுதியாக வகைப்படுத்தப் படுகிறார்கள். பொதுவாக கலிமந்தான் பகுதிகளில் வாழும் செலாக்கோ பழங்குடியினர் அவ்வாறு வகைப்படுத்தப் படுகிறார்கள்.[5] அந்த வகையில் மேற்கு கலிமந்தான் பகுதிகளில் வாழும் செலாக்கோ பழங்குடியினர்; செலாக்கோ தயாக்குகள் (Selako Dayaks) என்று அழைக்கப் படுகிறார்கள்.[6] காகரிங்கான் இந்து மதம்செலாக்கோ மக்களின் தாய்மொழி செலாகோ மொழி (Selako Language). மற்ற தயாக்கு பழங்குடி குழுக்களைப் போலவே, செலாகோ மக்களும் காரிங்கான் இந்து மததைத் (Kaharingan Hindu Religion) தழுவினர். ஆனால் இப்போது பல செலாக்கோக்கள் கிறிசுதவர்களாக மதம் மாறி உள்ளனர். பெரும்பாலும் போர்னியோ எவாஞ்சலிக்கர்கள் (Borneo Evangelical Church), ஆங்கிலிகன்கள் (Anglicans) மற்றும் ரோமன் கத்தோலிக்கர்கள் (Roman Catholics). 19-ஆம் நூற்றாண்டில் சமயப் பரப்புரையாளர்களால் பெரிய அளவில் மதமாற்றம் (Mass Conversion) நடைபெற்றது.[7] மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia