ஒராங் லாவுட் மக்கள்
லாவுட் மக்கள் அல்லது ஒராங் லாவுட் மக்கள் (ஆங்கிலம்: Orang Laut People; اورڠ لاءوت; மலாய்: Orang Laut) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் மலேசியப் பழங்குடியினர் இனக்குழுவில் மலாய மூதாதையர் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆகும். தீபகற்ப மலேசியாவின் 18 மலேசியப் பழங்குடியினர் குழுக்களில் ஒரு பிரிவினர் ஆகும்.[1] இவர்கள் சிங்கப்பூர், தீபகற்ப மலேசியா, இந்தோனேசியாவின் ரியாவ் தீவுகளைச் (Riau Archipelago) சுற்றியுள்ள கடல் பகுதிகளில் வாழும் பழங்குடியினர் ஆவார்கள். 21-ஆம் நூற்றாண்டில் ஒராங் லாவுட் பழங்குடியினரின் மக்கள் தொகை 420,000 பேர் என மதிப்பிடப்பட்டு உள்ளது. சொற்பிறப்பியல்ஓராங் லாவுட் என்பது மலாய் மொழிச் சொற்கள் ஆகும். 'கடல் மக்கள்' என்று பொருள்படும். ஒராங் லாவுட் மக்கள் பெரும்பாலும் கடலில், மிதவைப் படகுகளில் வாழ்கிறார்கள்; மற்றும் படகுகளிலேயே பயணம் செய்கிறார்கள்.[2] இவர்கள் மீன்பிடித்தல் மற்றும் கடல் பொருட்களைச் சேகரித்தல் போன்றவற்றின் வ்ழி தங்களின் வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள்.[3] இவர்களுக்கான மற்றொரு பெயர் ஒராங் செலாட் (Straits People). பொதுஇரியாவு தீவுக்கூட்டம், புலாவ் தூஜோ தீவுகள், பத்தாம் தீவுக்கூட்டம், கிழக்கு சுமத்திராவின் கடற்கரைகள் மற்றும் கடல் தீவுகள், தெற்கு மலாய் தீபகற்பம், சிங்கப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தீவுகள் மற்றும் முகத்துவாரங்களில் ஒராங் லாவுட் பழங்குடியினர் வாழ்கின்றனர். வரலாறுவரலாற்று அடிப்படையில், ஸ்ரீ விஜய பேரரசு, மலாக்கா சுல்தானகம், ஜொகூர் சுல்தானகம் ஆகிய அரசுகளில் ஒராங் லாவுட் மக்கள் மிக முக்கியமான பங்குகளை வகித்துள்ளனர். அந்த அரசுகளின் அருகில் இருந்த கடல் பகுதிகளில் காவல் பணி புரிந்து கடற்கொள்ளையர்களை விரட்டி அடித்தனர். வணிகர்களை அந்த அரசுகளின் துறைமுகங்களுக்கு வழி காட்டினர்; மற்றும் அந்தப் பகுதிகளின் துறைமுக ஆதிக்கத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.[4] ஒராங் லாவுட் மக்களின் உதவிகளுக்காக, அந்த அரசுகளின் ஆட்சியாளர்கள் ஒராங் லாவுட் தலைவர்களுக்கு மதிப்புமிக்க பட்டங்களையும் பரிசுகளையும் வழங்கினார்கள்.[3] ஓராங் லாவுட் பற்றி 14-ஆம் நூற்றாண்டின் சீனப் பயணி வாங் தயுவான் (Wang Dayuan) பல விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார். அவர் துமாசிக்கில் (Temasek) வசிப்பவர்களைப் பற்றி அவரின் தாயோயி சில்யூ (Daoyi Zhilüe) எனும் நூலில் விவரித்துள்ளார்.[5] மேலும் காண்கமேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia