மக்காசார் மக்கள் (ஆங்கிலம்: Makassar people, Makassarese, Makassan; இந்தோனேசியம்: Suku Makassar, tu-Mangkasara) என்பவர்கள் பழங்குடி சுலாவெசி மக்களில் ஒரு பிரிவினர் ஆவார்கள். இவர்கள் பெரும்பாலும் தெற்கு சுலாவெசி தீபகற்பப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; இந்தோனேசியாவின்மக்காசார் பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர்.
மக்காசர் மக்கள் பண்பாட்டுக் கூறுகளில் வளமானவர்கள்; மேலும் அவர்கள் பாரம்பரிய சமையல் மற்றும் கடல்சார் அறிவுக்காக நன்கு அறியப்படுகிறார்கள். பூகிஸ் மக்கள் இவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய இனக்குழுவினர் ஆவார்கள்.
பொது
பன்னாட்டு அளவில் நன்கு அறியப்பட்ட பினிசி(Phinisi) எனும் படகு கட்டுமானத் தொழிலில், இவர்கள் சிறந்து விளங்குகிறார்கள். பினிசி படகு கட்டுமானத் தொழில், பூகிஸ்-மக்காசார் மக்களின் கூட்டுக் கண்டுபிடிப்பு ஆகும்.[2][3]:311
கடல் வெள்ளரி(holothuroidea) அறுவடை மற்றும் பதப்படுத்தும் அறிவைப் பெற்ற முதல் பூர்வீக மக்களில் மக்காசார் மக்களும் அடங்குவர். தெற்கு சுலாவெயில் தங்கள் சொந்த தாயகத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளிலும் புலம்பெயர்ந்த மக்காசார் மக்கள் காணப்படுகின்றனர்.
தவிர மக்காசார் சமூகத்தினர் தென்கிழக்கு ஆசியாவின் தீவுப் பகுதிகளிலும் காணப்படுகின்றனர்.[4]:51 மக்காசர் மக்கள் மடகாஸ்கர் மக்களின் வழிகாட்டிகள் என்றும் நம்பப்படுகிறது.[5]:57
வரலாறு
ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைகளுக்கு மக்காசார் மீன்பிடி படகுகள் சென்ற இடங்கள்:
மக்காசார் இன மக்கள் தென்னாப்பிரிக்கா வரை; உலகப் பெருங்கடல்களின் பெரும் பகுதிகளில் பயணம் செய்துள்ளதாக அறியப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் "மக்காசார்" என்று அழைக்கப்படும் ஒரு பகுதி உள்ளது. அங்குள்ள உள்ளூர் மக்கள், கலப்பு பூர்வீக மற்றும் மக்காசார் மரபுவழியைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதப்படுகிறது.
இதற்கிடையில், மக்காசர் என்ற பெயர் அவர்களின் மூதாதையர்களின் தாயகத்தின் பெயரிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. தென்னாப்பிரிக்காவிலும் அண்டை நாடான மொசாம்பிக் நாட்டிலும் மக்காசார் எனும் பெயரில் பல இடங்கள் உள்ளன.[6]
மக்காசார் கடலோடிகள்
சுலாவெசியின் தென்மேற்கு பகுதியைச் சேர்ந்த மக்காசார் மக்கள், 18-ஆம் மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், வடக்கு ஆஸ்திரேலியாவின் கடற்கரைகளுக்கு கடல் வெள்ளரிகளைச் சேகரித்து பதப்படுத்த பயணம் செய்து இருப்பதாகவும் அறியப்படுகிறது.[7]
1720-ஆம் ஆண்டு முதல், இந்தோனேசியாவின் தெற்கு சுலாவெசியில் இருந்து ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரைகளுக்கு மக்காசார் மீன்பிடிப் படகுகள் சென்றுள்ளன. ஆனாலும் அதற்கு முன்பே மக்காசார் மக்கள் அங்கு போய் இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது.[8]
↑Couto, Diogo do (1645). Da Ásia: Década Quarta. Lisbon: Regia Officina Typografica, 1778-1788. Reprint, Lisbon, 1974. Década IV, part iii, p. 169.
↑Hornell, James (December 1934). "Indonesian Influence on East African Culture". The Journal of the Royal Anthropological Institute of Great Britain and Ireland64: 305–332. doi:10.2307/2843812.