செக் ஓங் மக்கள்
![]() செக் ஓங் அல்லது செக் ஓங் மக்கள் (ஆங்கிலம்: Cheq Wong people; மலாய்: Orang Cheq Wong) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்; பகாங் மாநிலத்தை மையமாகக் கொண்ட செனோய் மக்கள் ஆவார்கள். செனோய் மக்களின் உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பேசும் செக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது.[2] பொதுசெக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளின் ஒரு பகுதியாகும்.[3] செக் ஓங் மக்களும்; கென்சியூ பழங்குடி மக்களும் தொலை தூரங்களில் வாழ்ந்தாலும், கென்சியூ மொழியில் இருந்து 4% சொற்கள், செக் ஓங் மொழிக்குள் கடன் வாங்கப்படு உள்ளன.[4] செக் ஓங் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இருப்பினும் இந்த மக்களில் பலர் பகாங் ரவுப் மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர். குடியிருப்புப் பகுதிகள் பாதிப்புசெக் ஓங் மக்கள் முன்பு தீபகற்ப மலேசியா, பகாங் மாநிலத்தின், இரண்டு பகுதிகளில் மட்டுமே காணப்பட்டனர். அதாவது குராவ் வனவிலங்கு காப்பகம்; மற்றும் பகாங்கில் உள்ள ரவுப் மாவட்டம்.[5] இருப்பினும் தற்போது தெமர்லோ மற்றும் பகாங்கில் உள்ள ஜெராண்டுட் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப் படுகின்றனர்.[6][7] அண்மைய மேம்பாட்டுத் திட்டங்களினால், செக் ஓங் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. காட்டு மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் மற்றும் சுற்றுலாவுக்கான கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் போன்ற செயல்பாடுகளினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.[1] இந்தச் செயல்பாடுகளினால், செக் ஓங் மக்களின் சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன; ஆறுகளும் மாசுபடுவதற்கு வழிவகுக்கின்றன.[8] செக் ஓங் மக்கள் தொகைமலேசியாவில் செக் ஓங் மக்கள் தொகை (2010):-
மேலும் காண்கமேற்கோள்கள்
சான்று நூல்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia