தேசிய நெடுஞ்சாலை 536 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 536 தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தே.நெ 536 தமிழ்நாட்டின் திருமயம் மற்றும் இராமநாதபுரம் ஆகியவற்றை இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில் திருமயம் அருகில் புதியதாய் பாரத மிகு மின் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மொத்த நீளம் 109 கி.மீ. (68 மைல்). வழி![]() திருமயம் முதல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரம் வரை. மானாமதுரை முதல் தஞ்சாவூர் வரையில் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 36-ல் திருமயத்தில் இருந்து தொடங்கும் இச்சாலை காரைக்குடி நகருக்குள் செல்லாமல் தேவக்கோட்டை, திருவாடானை வழியாக இராமநாதபுரத்தில், கொச்சி முதல் இராமேசுவரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 87-ல் இணைகிறது.[1] காலக்கோடு
விரிவாக்கம்
02 ஜனவரி 2024 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 536ன் ஒரு பகுதியான காரைக்குடி - இராமநாதபுரம் இடையே புதிதாக கட்டமைக்கப்பட்ட 80கி.மீ நீள இரண்டு வழி சாலையுடன் கூடிய கூடுதல் பக்க சேவைசாலையை நாட்டிற்கு அர்பணித்து வைத்தார்.[5][6] மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia