தேசிய நெடுஞ்சாலை 87 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 87 (National Highway 87 (or NH 87) தென்னிந்தியாவில் உள்ள 🎁தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை-தனுஷ்கோடியை இணைக்கும் 154 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தேசிய நெடுஞ்சாலை 87 (தே. நெ. 87) தென்னிந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது பாம்பன் தீவு நுழைவதற்கு முன்பு பாம்பன் பாலத்தை (அன்னை இந்திரா காந்தி பாலம்) கடக்கிறது. இதன் மொத்த நீளம் 154 km (96 mi) கி.மீ. (96 மைல்) ஆகும்.[1] முகுந்தராயர் சத்திரத்திற்கும் தனுசுகோடிக்கும் இடையேயான 5 கி. மீ. சாலை 1964 சூறாவளியின் போது அழிக்கப்பட்டது. பின்னர் இந்திய அரசு 2015ஆம் ஆண்டு புதிய சாலையை நிர்மாணித்தது. 2015ஆம் ஆண்டு துவக்கப்பட்ட பணிகள் பிப்ரவரி 2017 அன்று 250 மில்லியன் ரூபாய் செலவில் சில வாகனக் கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. அதே நேரத்தில், மதுரை-இராமேசுவரம் இடையேயான சாலை இரு வழிச் சாலையிலிருந்து நான்கு வழிச் சாலையாக மாற்றப்பட்டது. பின்னர் மத்திய சாலைப் போக்குவரத்து, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி 17 சூலை 2015 அன்று மதுரையில் ரூ. 1,387 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 927 கோடி ஆரம்ப ஒதுக்கீடு (மே 2019) செய்யப்பட்டு, 1,387 கோடி ரூபாய்க்கு இத்திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் மதுரை பரமக்குடி வரையிலான முதல் 75 கி. மீ. நீளமுள்ள சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்றவும், பரமக்குடி இராமநாதபுரம் வரையிலான மீதமுள்ள 39 கி. மீ நீளமுள்ள சாலைகளை இரண்டு வழிச் சாலைகளாக அகலப்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தில் மதுரையிலிருந்து மேலூர் வரைச் செல்லும் புறவழிச்சாலை ஒன்றும் (விரகனூர் வளைய சாலை) அமைக்கப்பட்டது. இப்பாதை புளியங்குளம்-சிலைமான் வழியாகச் செல்லும் பாதையினைத் தவிர்த்து அமைக்கப்பட்டது. இச்சாலை திருப்புவனம், திருப்பாச்சேத்தி, ராஜகம்பீரம், பரமக்குடி (9.4 கி.மீ. நீளமுள்ள தெளிச்சாத்தநல்லூர்- விரிவாக்கம்தமிழ்நாட்டின் பரமக்குடி மற்றும் ராமநாதபுரம் இடையே தேசிய நெடுஞ்சாலை 87 (NH-87) இல் 46.7 கி.மீ நீளமுள்ள 4 வழி நெடுஞ்சாலையை நிர்மாணிக்க மத்திய அமைச்சரவை 01 ஜீலை 2025 அன்று ஒப்புதல் அளித்தது. ₹1,853 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டம் கலப்பின வருடாந்திர பயன்முறையின் (HAM) கீழ் உருவாக்கப்படும்.[2] [3] தே.நெ 87ன் இந்த பகுதியானது 2015ல் நடைபாதைகளுடன் கூடிய இரு வழிப்பாதைகளாக மேம்படுத்தப்பட்டது. [4][5] மேலும் காண்கமேற்கோள்கள்
வெள் இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia