தேசிய நெடுஞ்சாலை 785 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 785
785

தேசிய நெடுஞ்சாலை 785
Map
Map of National Highway 785 in red
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 85
நீளம்:65 km (40 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:மதுரை
வடக்கு முடிவு:துவரங்குறிச்சி
அமைவிடம்
மாநிலங்கள்:தமிழ்நாடு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 85 தே.நெ. 38

தேசிய நெடுஞ்சாலை 785 (National Highway 785 (India)), பொதுவாக தே. நெ. 785 எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 85ன் ஒரு துணைச் சாலை ஆகும்.[3] தே. நெ. 785 இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைக் கடந்து செல்கிறது.[2]

வழித்தடம்

தே. நெ. 785 மதுரை, நாகனாகுளம், அய்யர்பங்களா, ஊமச்சிக்குளம், வேம்பராலி, வத்திப்பட்டி, சத்திரப்பட்டி, சின்னப்பட்டி, நத்தம் மற்றும் துவரங்குறிச்சி ஆகிய பகுதிகளை இணைக்கிறது.[1][2][4]

சந்திப்பு

தே.நெ. 85 மதுரை அருகில் முனையம்[2]
தே.நெ. 383 நத்தம் அருகில்
தே.நெ. 38 முனையம் துவரங்குறிச்சி அருகில்

விரிவாக்கம்

  • 28 பிப்ரவரி 2019 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 785ன் பகுதிகளான மதுரை - செட்டிகுளம் வரையிலான 7.30கி.மீ நீளமுள்ள பாதை ரூ.679.98 கோடி மதிப்பினிலும், செட்டிக்குளம் - நத்தம் வரையிலான 29.39கி.மீ நீளமுள்ள பாதை ரூ.837.61 கோடி மதிப்பினிலும் மேம்படுத்த அடிக்கல் நாட்டினார்.[5][6][7][8]
  • 02 ஜனவரி 2024 அன்று பாரதப்பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 785ன் பகுதிகளான செட்டிக்குளம் - நத்தரம் வரையிலான 29.39கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்ட நான்குவழிச் சாலையை திறந்து வைத்தார்.[9]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 11 March 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 11 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 11 March 2019.
  4. "Route extension of NH 785 from Natham to Tovarankurichchi" (PDF). Retrieved 11 March 2019.
  5. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1566622
  6. https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1566668
  7. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/179/AS65.pdf?source=pqals
  8. https://sansad.in/getFile/loksabhaquestions/annex/176/AU1712.pdf?source=pqals#:~:text=11%20Karaikudi%20%2D%20Ramanathapuram%20section%20from,.2018%2066.00%25%2031.03.2022
  9. https://ddnews.gov.in/en/pm-modi-dedicates-to-nation-multiple-development-projects-worth-more-than-rs-20000-crores-in-tiruchirappalli/

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya