தேசிய நெடுஞ்சாலை 36 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 36 (என். எச் 36) இந்தியாவின், தமிழ்நாட்டில் முழுவதுமாக அமைந்திருக்கும் ஒரு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இதன் மொத்த நீளம் 334 கி.மீ. (208 மைல்) ஆகும்.[1] இது தமிழ்நாட்டில் இருக்கும் விக்கிரவாண்டி மற்றும் மானாமதுரை இரண்டையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை. மாநில நெடுஞ்சாலை 8 (SH 8) என்பது தேசிய நெடுஞ்சாலை (45சி)யாக மாற்றியமைக்கப்பட்டது பின்னர் NH 36 ஆக மாற்றியமைக்கபட்டது. வழித்தடம்கோலியனூர் (விழுப்புரம்) - பண்ருட்டி - வடலூர் - சேத்தியாத்தோப்பு - அணைக்கரை - திருப்பனந்தாள் - கும்பகோணம் - பாபநாசம் - தஞ்சாவூர் - கந்தர்வகோட்டை - புதுக்கோட்டை - திருமயம் - திருப்பத்தூர் - சிவகங்கை விரிவாக்கம்தேசியநெடுஞ்சாலை 36(முன்பு தே.நெ 45C), 164கி.மீ நீளமுள்ள விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் பாதையானது நான்கு வழி சாலையாக மேம்படுத்த முன்மொழியப்பட்டது. முதலில் இந்த திட்டம் விக்கிரவாண்டி - மீன்சுருட்டி வரை நான்கு வழி பாதையாகவும், பின்பு மீன்சுருட்டி - தஞ்சாவூர் வரை, 'நடைபாதைகளுடன் கூடிய இரு வழிப்பாதைகளாகவும்' கட்டமைக்க திட்டமிடப்பட்டிருந்தது.[2][3] இந்த திட்டம் மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படுகின்றது.[4][5][6]
06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திரமோதி, தேசிய நெடுஞ்சாலை 36ன் பகுதியான தஞ்சாவூர் - சோழபுரம் நான்கு வழிச்சாலையை நாட்டிற்கு அர்பணித்தார்.[10][11] நன்மை
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia