தேசிய நெடுஞ்சாலை 32 (இந்தியா)
தேசிய நெடுஞ்சாலை 32 (National Highway 32; NH 32) தேசிய நெடுஞ்சாலை. இது இந்தியா வின் ஒரு முக்கிய சாலை ஆகும். சென்னையில் தொடங்கி தூத்துக்குடியில் முடிவடைகிறது. [1] [2] இது கிழக்கு கடற்கரை சாலை என்றும் அழைக்கப்படுகிறது. 5 டிசம்பர் 2017 அன்று அறிவிப்பின்படி இந்த நெடுஞ்சாலை தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. [3] பாதைஇந்தப் பாதை தே. நெ. 48 அருகில் சென்னையில் ஆரம்பித்து, செங்கல்பட்டு, மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, காரைக்கால் , நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம், மணமேல்குடி, கட்டுமாவடி,தொண்டி, தேவிபட்டினம், ராமநாதபுரம் பைபாஸ், திருபுல்லானி, கீழகரை, ஏர்வாடி, வாலிநோக்கம், சாயல்குடி, வெம்பார், வைப்பாறு, குலத்தூர், வேப்பலோடை, பட்டிநாமருதூர், வழியாக தே. நெ. 44ல் தூத்துக்குடி அருகில் முடிவடைகின்றது.[3] சந்திப்புகள்
காலக்கோடுதேசிய நெடுஞ்சாலை 45A ஆனது தேசிய நெடுஞ்சாலை 32 ஆக எண் மாற்றம் செய்யப்பட்டது.[4] 2018ல் பாரத்மாலா பரியோஜனா கட்டம்-1 இன் கீழ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பின்வரும் விழுப்புரம் - புதுச்சேரி - பூண்டியான்குப்பம் - சட்டநாத புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலைப் பிரிவை கலப்பின(Hybrid annuity) வருடாந்திர முறையில் மேம்படுத்துவதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விருது கடிதத்தை (LOA) வெளியிட்டுள்ளது.[5][6][7] பின்வரும் கட்டங்களாக இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.[8][9]
06 ஏப்ரல் 2025 அன்று பிரதமர் நரேந்திர மோதி, தேசிய நெடுஞ்சாலை 32ன் பகுதிகளான பூண்டியான்குப்பம் - சட்டநாதபுரம் வரையிலான 56.8 கி.மீ நீளத்திற்கும், தே.நெ 332 விழுப்புரம் - புதுச்சேரி வரையிலான 29 கி.மீ நீளத்திற்கும் நான்கு வழியாக மாற்றப்பட்ட சாலையினை நாட்டிற்கு அர்பணித்தார்.[10][11] தே.நெ. 32ன் பகுதியான நாகப்பட்டினம் - தூத்துக்குடி வரையிலான 332கி.மீ கிழக்கு கடற்கரை சாலை ரூ.7000கோடியினில் நான்கு வழிச் சாலையாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.[12][13] நன்மைகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia