சரவாக் ஐக்கிய கட்சி
சரவாக் ஐக்கிய கட்சி (ஆங்கிலம்: United Sarawak Party; மலாய்: Parti Sarawak Bersatu) (PSB) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள பல்லின அரசியல் கட்சியாகும். 2014-இல் வோங் சூன் கோ (Wong Soon Koh) என்பவரால் நிறுவப்பட்டது. சரவாக் மாநிலத்தின் சீன சமூகத்தினரின் மாற்றம் மற்றும் ஒற்றுமைக்கான புதிய அடையாளமாக இந்தக் கட்சி தொடங்கப்பட்டது.[2] இந்தக் கட்சி தொடக்கத்தில் ஐக்கிய மக்கள் கட்சி (United People's Party) எனும் பெயரில் நிறுவப்பட்டது; 17 ஆகஸ்டு 2014 அன்று கூச்சிங் நகரில் அதன் தலைமையகத்தைக் கொண்டு இருந்தது. கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக, 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 2024 ஏப்ரல் 6-ஆம் தேதி கலைக்கப்பட்டது.[3] பொதுசரவாக் ஐக்கிய கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர், சரவாக்கில் உள்ள மூன்று முக்கிய சமூகங்களைச் சார்ந்தவர்களாகும். அதாவது சரவாக் சீனர் சமூகம், சரவாக் தயாக் சமூகம் மற்றும் சரவாக் மலாய் சமூகம்; ஆகிய சமூகங்களைச் சார்ந்தவர்கள். சரவாக் ஐக்கிய கட்சி என்பது சரவாக் ஐக்கிய மக்கள் கட்சியில் (SUPP) இருந்து பிரிந்த கட்சியாகும். சரவாக்கின் மலேசியாவின் இரண்டாவது நிதியமைச்சர் வோங் சூன் கோவால் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் சரவாக் சீனர்களின் ஆதரவைப் பெரிய அளவில் பெற்றது.[4][5] அரசியல்சரவாக் மாநிலத்தின் சீனர்களின் சமூக, அரசியல் நலன்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியின் தலைமைத்துவத்தில் அடிக்கடி சர்ச்சைகள் ஏற்பட்டு வந்தன. பாரிசான் நேசனல் கூட்டணியில் இணைவதில் இருந்து பிரச்சினைகள் தொடர்ந்தன.[6] சரவாக் ஐக்கிய கட்சி அதிகாரப்பூர்வமாக 6 ஏப்ரல் 2024 அன்று கலைக்கப்பட்டது. மேலும் அதன் முன்னாள் உறுப்பினர்கள் அனைவரும் சரவாக் முற்போக்கு ஜனநாயக கட்சியில் இணைக்கப்பட்டனர்.[7] மேலும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia