சபா மக்கள் ஐக்கிய முன்னணி
சபா மக்கள் ஐக்கிய முன்னணி எனும் பெர்ஜாயா (ஆங்கிலம்: Sabah People's United Front; மலாய்: Parti Bersatu Rakyat Jelata Sabah) (BERJAYA) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் செயல்பாட்டில் இருந்த ஓர் அரசியல் கட்சியாகும். இந்தக் கட்சி, ஐக்கிய சபா தேசிய அமைப்பு எனும் அசுனோ கட்சியின் (USNO) முன்னாள் பொதுச் செயலாளர் அரிஸ் சாலே என்பவரால் 1975-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1991-இல் இந்தக் கட்சி கலைக்கப்பட்டது. அரிஸ் சாலே பின்னர் புவாட் இசுடீபன்ஸ் என்பவருடன் இணைந்தார். புவாட் இசுடீபன்ஸ் சபாவின் முதல் முதலமைச்சராகவும் ஐக்கிய பாசோக்மோமோகான் கடாசான் மூருட் அமைப்பு எனும் உப்கோ (UPKO) கட்சியின் தலைவராகவும் பணியாற்றினார். 1976 ஏப்ரலில் நடந்த சபா மாநிலத் தேர்தலில் பெர்ஜாயா வெற்றி பெற்ற பிறகு, புவாட் இசுடீபன்ஸ் சபா மாநிலத்தின் ஐந்தாவது முதலமைச்சரானார். ஆனால் அதே ஆண்டு சூன் மாதம் புவாட் இசுடீபன்ஸ் காலமானார். அவருக்குப் பிறகு அரிஸ் சாலே பதவியேற்றார்.[1][2] 1975-ஆம் ஆண்டு சூலை 15-ஆம் தேதி சபா மக்கள் ஐக்கிய முன்னணி தொடங்கப்பட்டதில் இருந்து, மலேசியாவின் அப்போதைய ஆளும் கூட்டணியான பாரிசான் நேசனல் (பிஎன்) கூட்டணியின் உறுப்புக் கட்சியாக இருந்து வந்தது.[3] பொதுசபா மக்கள் ஐக்கிய முன்னணி (பெர்ஜாயா) 1976-ஆம் ஆண்டு மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்று; ஐக்கிய சபா தேசிய அமைப்பு எனும் அசுனோ (USNO) கட்சியை வெளியேற்றியது. அதன் பின்னர்; 1976-ஆம் ஆண்டில் இருந்து முதல் 1985-ஆம் ஆண்டு வரை வரை 8 ஆண்டுகள் சபா மாநிலத்தை ஆட்சி செய்தது.[4] அந்தக் காலக் கட்டத்தில், புவாட் இசுடீபன்ஸ் (Fuad Stephens) சபாவின் ஐந்தாவது முதலமைச்சராகப் பதவி வகித்தார். அத்துடன் அவர் இரண்டாவது முறையாகவும் சபாவின் முதலமைச்சராகப் பதவி வகித்தார். புவாட் இசுடீபனுக்கு முன்னர் அசுனோ கட்சியின் தலைவர் முகமது சைட் கெருவாக் (Mohammad Said Keruak) என்பவர் சபாவின் முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்றிருந்தார். இரட்டை ஆறு சோகம்இருப்பினும், புவாட் இசுடீபன்ஸ், முதலமைச்சரான 44 நாட்களுக்குப் பிறகு, 6 சூன் 1976 அன்று கோத்தா கினபாலுவில் நடந்த ஒரு வானூர்தி விபத்தில் அகால மரணம் அடைந்தார். இந்த விபத்து இரட்டை ஆறு சோகம் (Double Six Tragedy) என்று அழைக்கப்படுகிறது. அந்த விபத்தில், சபா மாநிலத்தின் உள்ளாட்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சராக இருந்த டத்தோ பீட்டர் சாய்னோட் மொஜுந்தின் (Peter Joinud Mojuntin) உட்பட சில மாநில அமைச்சர்களும் உயிரிழந்தனர். அதன் பின்னர் அரிஸ் சாலே சபாவின் ஆறாவது முதலமைச்சராகப் பதவியேற்றார். ஜோசப் பைரின் கித்திங்கான்1981-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில், பெர்ஜாயா கட்சி மீண்டும் வெற்றி பெற்றது. இந்த முறை அமோகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. பெர்ஜாயா கட்சி போட்டியிட்ட 48 இடங்களில்; 44 இடங்களில் வெற்றி பெற்றனர்.[5] 1984-இல், பெர்ஜாயா கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோசப் பைரின் கித்திங்கான்; பெர்ஜாயா கட்சியை விட்டு வெளியேறி பார்ட்டி பெர்சத்து சபா (Parti Bersatu Sabah) எனும் ஐக்கிய சபா கட்சியை (PBS) உருவாக்கினார். புதிதாக உருவாக்கப்பட்ட ஐக்கிய சபா கட்சி 1985 மாநிலத் தேர்தலில் பெர்ஜெயா கட்சியைத் தோற்கடித்தது.[6] 1990 சபா மாநிலத் தேர்தல்1990-ஆம் ஆண்டு சபா மாநிலத் தேர்தலில், பெர்ஜாயாவின் ஆதரவு வெகுவாகக் குறைந்தது. அந்தத் தேர்தலில் ஓர் இடத்தைக் கூட வெல்ல முடியவில்லை; மற்றும் அது ஐக்கிய சபா கட்சியால் (பிபிஎஸ்) வெளியேற்றப்பட்டது.[7][8] இதன் பின்னர் தீபகற்ப மலேசியாவைத் தளமாகக் கொண்ட அம்னோ (UMNO); சபா அம்னோ கட்சியை உருவாக்குவதற்கு ஐக்கிய சபா தேசிய அமைப்பு எனும் அசுனோவுடன் (USNO) இணைக்கப்பட்டது. அசுனோவின் தலைவர் துன் முசுதபா அருன் சபா அம்னோவின் முதல் தலைவரானார். அதே வேளையில் அரிஸ் சாலே சபா அம்னோவின் ஆலோசகரானார்.[9] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia