சபா தாயக ஒற்றுமை கட்சி
சபா தாயக ஒற்றுமை கட்சி (ஆங்கிலம்: Homeland Solidarity Party Sabah; மலாய்: Parti Solidariti Tanah Airku) (STAR) என்பது மலேசியாவின் சபா மாநிலத்தில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும். ஜோசப் பைரின் கித்திங்கானின் சகோதரர் ஜெப்ரி கித்திங்கான் என்பவரால் 1 சூலை 2016 அன்று இந்தக் கட்சி நிறுவப்பட்டது.[3] 2016-இல், சபா மாநிலத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய சபா கூட்டணியின் (United Sabah Alliance) (USA) நான்கு உறுப்புக் கட்சிகளில் சபா தாயக ஒற்றுமை கட்சியும் ஒன்றாகும். பொதுஅந்தக் காலக் கட்டத்தில் (2016), சபா மாநிலத்தில் நிறுவப்பட்ட ஐக்கிய சபா கூட்டணி (United Sabah Alliance) அமைப்பின் இதர கட்சிகள்:
வரலாறு2018 சபா மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, சபா தாயக ஒற்றுமை கட்சி பாரிசான் நேசனல் கூட்டணியுடன் இணைந்து சபா மாநில அரசாங்கத்தை அமைத்தது.[4] இருப்பினும், பாரிசான் நேசனல் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி, சபா பாரம்பரிய கட்சிக்கு (Parti Warisan Sabah) தங்கள் ஆதரவை வழங்கியதால், மாநில அரசாங்கம் அதிகாரத்தை இழந்தது. பின்னர் பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் ஆதரவுடன் பாரிசான் நேசனல் அரசாங்கம் மாற்றப்பட்டது. சபா தாயக ஒற்றுமை கட்சி, பின்னர் சபா மக்கள் கூட்டணியின் (GRS) ஒரு பகுதியாக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. சேவைஐக்கிய நாடுகள் அவை, யுனெஸ்கோ மூலமாகவும்; மற்றும் அனைத்து வரலாற்று ஆவணங்கள் மூலமாகவும் சபா மக்களின் உரிமைகளை இந்தக் கட்சி தீவிரமாக ஆய்வுகள் செய்து பாதுகாத்து வருகிறது.[5] நிலைப்பாடு2022-ஆம் ஆண்டு, பாக்காத்தான் அரப்பான் கூட்டணியின் தலைமையிலான மத்திய கூட்டணி ஒற்றுமை அரசாங்கத்தை சபா மக்கள் கூட்டணி ஆதரிக்க முடிவு செய்தது. அதனைத் தொடர்ந்து, பெரிக்காத்தான் நேசனல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து டிசம்பர் 5, 2022 அன்று சபா தாயக ஒற்றுமை கட்சி வெளியேறியது. அடுத்தக் கட்டமாக சபா முற்போக்கு கட்சியும் (Sabah Progressive Party - SAPP) கட்சியும் பெரிக்காத்தான் நேசனல் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இருந்து வெளியேறியது.[6] தேர்தல் முடிவுகள்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia