சரவாக் தேசிய கட்சி
சரவாக் தேசிய கட்சி (ஆங்கிலம்: Sarawak National Party; மலாய்: Parti Kebangsaan Sarawak) (SNAP) என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் இருந்த ஓர் அரசியல் கட்சி; தற்போது செயலிழந்த அரசியல் கட்சியாகும். 1963 முதல் 1966 வரை மலேசிய கூட்டணியின் உறுப்பினர் கட்சியாகவும், 1976 முதல் 2004-இல் அந்தக் கட்சி வெளியேற்றப்படும் வரையில் பாரிசான் நேசனல் (BN) கூட்டணியின் உறுப்பினராகவும் இருந்தது.[1] ஏப்ரல் 10, 1961-இல் நிறுவப்பட்ட இந்தக் கட்சி, சரவாக் மாநிலத்தில் தயாக்கு பழங்குடி மக்களின் மிகப் பழைமையான அரசியல் கட்சி என அறியப்படுகிறது.[2] பொதுஇந்தக் கட்சியின் முதல் பொதுச்செயலாளர் இஸ்டீபன் காலோங் நிங்கான் (Stephen Kalong Ningkan) ஆவார். இவர் ஒரு மருத்துவமனை உதவியாளராகப் பணிபுரிந்தவர் ஆவார். பின்னர் அவர் இதே கட்சியின் தலைவராகவும் சரவாக்கின் முதல் முதலமைச்சராகவும் (1963-1966) பொறுப்பு வகித்தார். இந்தக் கட்சி 2004 மலேசியப் பொதுத் தேர்தலிலும்; 2006-ஆம் ஆண்டு, 2011-ஆம் ஆண்டு சரவாக் மாநிலத் தேர்தல்களிலும் எதிர்க்கட்சியாகப் போட்டியிட்டது. பதிவு நீக்கம்ஏப்ரல் 2010 முதல் ஏப்ரல் 2011 வரை, அப்போதைய கூட்டாட்சி எதிர்க்கட்சியான பாக்காத்தான் ராக்யாட் (PR) கூட்டணியில், இந்தச் சரவாக் தேசிய கட்சி இணைந்து இருந்தது.[3] 5 நவம்பர் 2002 அன்று, இந்தக் கட்சியை மலேசியச் சங்கங்களின் பதிவாளர் (Registrar of Societies) பதிவு நீக்கம் செய்தார்.[4] இந்தக் கட்சி தன்னுடைய தலைமைத்துவ நெருக்கடியைத் தீர்க்கத் தவறியதாக 17 சனவரி 2013 அன்று மலேசிய உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.[5] மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia