செலுபு மக்களவைத் தொகுதி
செலுபு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Jelebu; ஆங்கிலம்: Jelebu Federal Constituency; சீனம்: 日叻务国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், செலுபு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P126) ஆகும்.[5] செலுபு மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1974-ஆம் ஆண்டில் இருந்து செலுபு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] செலுபு மாவட்டம்செலுபு மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்தச் செலுபு மாவட்டம், செம்போல் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய மாவட்டமாகும். விவசாயத் துறையை முதன்மையாகக் கொண்ட மாவட்டம். சிரம்பான் மாவட்டம்; செம்போல் மாவட்டம்; கோலா பிலா மாவட்டம்; பகாங் மாநிலம்; மற்றும் சிலாங்கூர் மாநிலம்; ஆகியவை செலுபு மாவட்டத்தின் எல்லைகளாக உள்ளன. செலுபு ஒரு புறநகர் மாவட்டம் ஆகும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இந்த மாவட்டத்தில் சுங்கை முன்தோ (Sungai Muntoh) எனும் செழிப்பான ஒரு ஈயச் சுரங்க நகரம் இருந்தது. அண்மையில் இங்கு விலைமதிப்பற்ற காலனித்துவ கலைப் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தக் கலைப் பொருட்கள் தற்போது அரசு அருங்காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன. செலுபு மக்களவைத் தொகுதி
செலுபு தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
குறிப்புகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia