ராசா மக்களவைத் தொகுதி
ராசா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Rasah; ஆங்கிலம்: Rasah Federal Constituency; சீனம்: 亚沙国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P130) ஆகும்.[5] ராசா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 1986-ஆம் ஆண்டில் இருந்து ராசா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] சிரம்பான் மாவட்டம்சிரம்பான் மாவட்டம், நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் ஒன்றாகும். சிரம்பான் மாவட்டத்தின் முக்கிய நகரம் சிரம்பான் நகரம். அதுவே நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகரமும் ஆகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 54 கி.மீ. தொலைவிலும்; மலாக்கா நகரில் இருந்து 86 கி.மீ. தொலைவிலும்; ஜொகூர் பாரு நகரில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும்; அமைந்து உள்ளது. புதிதாக உருவாக்கப்பட்ட சிரம்பான் மாநகராட்சி; சிரம்பான் மாவட்டம் முழுவதையும் உள்ளடக்கியது. 1 சனவரி 2020-இல் சிரம்பான் மாநகராட்சி; மற்றும் நீலாய் நகராட்சி ஆகிய இரு மன்றங்களும் ஒன்றிணைக்கப் பட்டன. அதன் மூலம் சிரம்பான் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. சிரம்பான் மாநகரத்தின் மையப் பகுதிகள்; சிரம்பான் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்குள் வருகின்றன. ராசா மக்களவைத் தொகுதி
கோலா பிலா தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia