போர்டிக்சன் மக்களவைத் தொகுதி
போர்டிக்சன் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Port Dickson; ஆங்கிலம்: Port Dickson Federal Constituency; சீனம்: 波德申国会议席) என்பது மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் மாவட்டம்; மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டம் (தஞ்சோங் துவான்) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P132) ஆகும்.[5] போர்டிக்சன் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டு 1974-ஆம் ஆண்டில் நீக்கப்பட்டது. பின்னர் 2018-ஆம் ஆண்டில் மீண்டும் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது. 2004-ஆம் ஆண்டில் இருந்து போர்டிக்சன் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6] பொதுபோர்டிக்சன் மக்களவைத் தொகுதி நெகிரி செம்பிலான் மாநிலத்தின் போர்டிக்சன் மாவட்டம்; மலாக்கா மாநிலத்தின் அலோர் காஜா மாவட்டம் (தஞ்சோங் துவான்) ஆகிய இரு மாவட்டங்களில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி ஆகும். மலேசியாவின் இரண்டு மாநிலங்களில் ஒரே நாடாளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள ஒரே தொகுதி இதுவே ஆகும். போர்டிக்சன் நகரம் மலேசியாவில் நன்கு அறியப்பட்ட ஒரு பிரபலமான விடுமுறைச் சுற்றுலாத் தளமாகும். கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 90 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 30 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் பெருநகரங்களில் இருந்து முக்கிய நெடுஞ்சாலைகள் மூலமாக எளிதில் அடையக் கூடிய இடத்தில் அமைந்து உள்ளது. 10 மைல் நீளத்திற்கு அமைதியான கடற்கரைகள் நீண்டுள்ளன. நெகிரி செம்பிலானில் ஒரே கடற்கரை மாவட்டம் ஆகும். போர்டிக்சன் மக்களவைத் தொகுதி
போர்டிக்சன் தேர்தல் முடிவுகள்
மேற்கோள்கள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia