வத்தலக்குண்டுவத்தலகுண்டு (Vatthalagundu) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு சிறப்புநிலை பேரூராட்சி ஆகும். இது தேனி - திண்டுக்கல் செல்லும் வழியில், தேனியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது மதுரையிலிருந்து 54 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இந்தப் பேரூராட்சி கொடைக்கானல் மலையடிவாரத்தில் உள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 22,928 மக்கள்தொகை கொண்ட இப்பேரூராட்சி, 12.94 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 169 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது நிலக்கோட்டை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1] இங்கு வசிக்கும் பலர் பெரும்பாலும் வேளாண்மை சார்ந்த வர்த்தகம் செய்பவர்கள். வாழையிலை, வெற்றிலை, தேங்காய் தூள் ஏற்றுமதி, காரட், முட்டைக்கோஸ், ப்ளம்ஸ், தரகு வர்த்தகம், பருத்தி நெய்தல் முதலான வியாபாரம் செய்பவர்கள் அதிகம்.
பெயர்க் காரணம்வத்தலக்குண்டு என்பது மருவுப்பெயர். இது குன்றுப்பகுதி மற்றும் இங்கு வெற்றிலை அதிகம் விளைவதால் இந்த ஊரை "வெற்றிலைக்குன்று" என அழைத்து வந்தனர். கால போக்கில் அது மருவி வெத்தலைக்குண்டு எனவும் பிறகு வத்தலக்குண்டு எனவும் பெயர் பெற்றதாக அறியப்படுகிறது. மக்கள் வகைப்பாடு2011-ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, வத்தலகுண்டு பேரூரட்சியின் மொத்த மக்கள்தொகை 22,928 ஆகும். இதில் இந்துக்கள் 81.80%, கிறித்தவர்கள் 5.35%, இசுலாமியர்கள் 12.68%, மற்றவர்கள் 0.17% ஆகவுள்ளனர்.[5] மண்ணின் மக்கள்
கோயில்கள்
திருமண மண்டபங்கள்
இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia