தூதரகங்களின் பட்டியல், மலேசியாமலேசியாவின் தூதரகங்களின் பட்டியல் (ஆங்கிலம்: List of Diplomatic Missions of Malaysia) என்பது உலகளாவிய நிலையில் மலேசியாவின் வெளிநாட்டுத் தூதரகங்களைக் குறிப்பிடும் ஒரு பட்டியல் ஆகும். 2022-ஆம் ஆண்டு நிலவரப்படி 63 நாடுகளில், மலேசியா தன் தூதரகங்களையும்; 39 நாடுகளில் தன் தூதரக அலுவலகங்களையும் கொண்டு உள்ளது.[1] மலேசிய வெளியுறவு அமைச்சின் செயல்பாடுகள், 1956-ஆம் ஆண்டில், மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு ஒரு ஆண்டிற்கு முன்பே தொடங்கி விட்டன. தொடக்கத்தில் இந்த அமைச்சு வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) என அழைக்கப்பட்டது. மலேசிய வெளியுறவு அமைச்சு பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்தை முன்மாதிரியாகக் கொண்டது.[2] வரலாறு1955-ஆம் ஆண்டு, மலாயாவின் முதல் கூட்டரசு தேர்தல் நடந்து முடிந்ததும், துங்கு அப்துல் ரகுமான் (Tunku Abdul Rahman Putra Al-Haj) அவர்களின் அலுவலகத்திலேயே மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டது. அப்போது அந்த அமைச்சு, மலாயா கூட்டரசின் மலேசிய வெளி உறவுகள் அமைச்சு (Ministry of External Affairs) என்று அழைக்கப்பட்டது.[3] மலேசிய வெளியுறவு அமைச்சு அமைக்கப்பட்டதும், பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு 11 பேர் முதன்முறையாக தூதர்வழிப் பயிற்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர், இவர்களில் சிலர் உலக நாடுகளுக்கு மலாயாவின் தூதர்களாக நியமிக்கப்பட்டனர். புத்ராஜெயாவிற்கு இடமாற்றம்அதன் பின்னர், 1966-ஆம் ஆண்டு, மலாயாவின் வெளிவிவகார அமைச்சு (Ministry of External Affairs) என்பது மலேசிய வெளியுறவு அமைச்சு (Ministry of Foreign Affairs) என்று பெயர் மாற்றம் கண்டது. கோலாலம்பூர், புக்கிட் பெட்டாலிங் எனும் இடத்திற்கு இடப்பெயர்வும் செய்யப்பட்டது. அப்போது இருந்து, மலேசிய வெளியுறவு அமைச்சு, இன்று வரையில் விசுமா புத்ரா என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில், 2001 செப்டம்பர் 17-ஆம் தேதி, புத்ராஜெயாவிற்கு நிரந்தரமாக இடம் மாறியது. மலேசியாவின் முதல் தூதரகங்கள் லண்டன், வாஷிங்டன், கான்பெரா, நியூயார்க், புதுடில்லி, ஜகார்த்தா, பாங்காக் ஆகிய நகரங்களில்தான் அமைக்கப்பட்டன. 1963-ஆம் ஆண்டில் 14 நாடுகளில் தூதரகங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 1966-இல், அதுவே 21 நாடுகளாகின. இப்போது, 112 நாடுகளில் மலேசியாவின் தூதரகங்களும் அலுவலகங்களும் செயல்பட்டு வருகின்றன. மலேசியாவின் தூதரகங்களின் பட்டியல்
வட அமெரிக்கா![]()
தென் அமெரிக்கா
ஆசியா
மத்திய கிழக்கு
ஆப்பிரிக்கா
ஓசியானியா![]() ![]()
பன்முக அமைப்புகள்
சான்றுகள்
மேலும் காண்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia