Prang Besar Local Council (1995-1997) Sepang District Council (MDS)(1997-2001)
புத்ராஜெயா நகராட்சி அல்லது புத்ராஜெயா மேம்பாட்டுக் கழகம் (மலாய்: Perbadanan Putrajaya (PPj); ஆங்கிலம்: Putrajaya Corporation (PjC); என்பது மலேசியா, புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தை (Federal Territory of Putrajaya) நிர்வகிக்கும் ஓர் உள்ளூராட்சி அமைப்பு (Local Authority) ஆகும்.[1][2]
இந்த நிறுவனம் மலேசிய கூட்டரசு பிரதேசங்கள் துறையின் (Ministry of the Federal Territories) கீழ் உள்ளது. இதன் தலைமையகம் (PPj); புத்ராஜெயா வளாகம் 3, பெர்சியாரான் பெர்தானா (Precinct 3, Persiaran Perdana, Putrajaya) எனும் இடத்தில் அமைந்துள்ளது.
பொது
புத்ராஜெயா நகராட்சி நாடி புத்ரா (Nadi Putra) பேருந்து சேவைகளின் நடத்துனராகவும் உள்ளது. இந்தச் சேவை இது புத்ராஜெயா, சைபர்ஜெயா, கோலாலம்பூர் மற்றும் தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இயங்குகிறது. புத்ராஜெயா இப்போது கட்டணம் வசூலிக்கும் வாகன நிறுத்துமிடமாக உள்ளது. மேலும் சட்டவிரோத வாகன நிறுத்தத்திற்கு நகராட்சி அழைப்பாணையை (Summons for Illegal Parking) அனுப்பும்.