பையூம் (Faiyum (அரபி: الفيومஎகிப்து நாட்டின் மையப் பகுதியில் அமைந்த பண்டைய நகரம் ஆகும். இது எகிப்தின் தலைநகர் கெய்ரோவிற்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில், ந்டு எகிப்தில் உள்ளது. பையூம் ஆளுநரகத்தின் தலைநகரமாக செயல்படும் பையூம் நகரம், பையூம் பாலைவனச்சோலையில் அமைந்துள்ளது. பையூம் நகரம் எகிப்தின் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.[2]இந்த நகரம் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில்கள் அமைந்துள்ளது.
பண்டைய வரலாறு
பழைய எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 2686–2181) பையூம் நகரம் நிறுவப்பட்டது.[3] இந்நகரத்தில் முதலைக் கடவுளான சோபெக்கின் கோயில் உள்ளது. எனவே இந்நகரத்தை எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தினர் முதலை நகரம் என்று அழைத்தனர். மேலும் சோபெக் கோயிலின் குளத்தில் முதலைகளை வளர்த்தனர்.[4][5]
பையூம் நகர வரைபடம்எகிப்தை ஆண்ட உரோமானியனின் சித்திரம், காலம் கிபி 125–150
கிமு மூன்றாம் நூற்றாண்டில் இரண்டாம் தாலமி ஆட்சிக் காலத்தில் பிலடெல்பியா நகரத்தை அமைப்பது குறித்த குறிப்புகள் பாபிரஸ் காகிதத்தில் உள்ளது.
1914-15-ஆம் ஆம் ஆண்டில் இந்நகரத்தின் சோபெக் கோயில் அருகே வேளாண்மைத் தொழிலாளிகள் மண்னை கிளரிய போது, 2,000 பாபிரஸ் காகிதக் குறிப்புகள் கண்டெடுக்கப்பட்டது. இக்காகிதக் குறிப்புகள் அனைத்தும் எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்ச காலத்திய பண்டைய கிரேக்க மொழியில் வேளாண்மை மற்றும் நீர்பாசானம் குறித்து எழுதப்ப்பட்டிருந்தது.[6][7]
நவீன பையூம் நகரம்
நவீன் பையூம் நகர வரைபடம், ஆண்டு 1868-1870
நவீன பையூம் நகரம் பல அங்காடிகளும், வாரச் சந்தைகளும், பள்ளிவாசல்களும் கொண்டுள்ளது.[8][9]நைல் நதியில் குடிநீர் மற்றும் நீர் பாசான வாய்க்கல்கள் பையூம் நகரத்தின் ஊடாகச் செல்கிறது.
தட்ப வெப்பம்
இந்நகரத்தின் கோடைக்காலத்தில் 13 சூன் 1965 அன்று அதிகபட்ச வெப்பம் 46 °C (115 °F) ஆகவும், குளிர்காலத்தில் 8 சனவரி 1966 அன்று இதன் குறைந்த பட்ச வெப்பம் 2 °C (36 °F) ஆக பதிவாகியுள்ளது.[10]