மேற்கு விரைவு நெடுஞ்சாலை
![]() மேற்கு விரைவு நெடுஞ்சாலை (Western Express Highway, சுருக்கமாக: WEH)[2] இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் வரை நீளும் 25.33 கிலோ மீட்டர் நீளம் கொண்ட விரைவுச் சாலையாகும். இந்த விரைவு நெடுஞ்சாலை மொத்தம் 8 முதல் 10 வரையிலான வழித்தடங்கள் கொண்டது.[3] இச்சாலை மும்பை புறநகர் மாவட்டத்தின் மீரா ரோட்டிலிருந்து துவங்கி விரிவாக்கம் அடைந்து, வடக்கே பாந்திரா-வொர்லி கடற்பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலை 48-இல் இணைகிறது. இச்சாலை மும்பையின் புறநகர் பகுதிகளுக்கும், சத்திரபதி சிவாஜி பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கும் விரைவான போக்குவரத்திற்கு உதவியாக உள்ளது. சந்திப்புச் சாலைகள்மேற்கு விரைவு நெடுஞ்சாலையுடன் கோரேகாவில் வீர சாவர்க்கர் சாலை மற்றும் ஜெனரல் ஏ. கே. வைத்தியா மார்க், ஜோகேஸ்வரி-விக்ரோளி இணைப்புச் சாலை, சாந்த குருஸ்-செம்பூர் இணைப்புச் சாலை, அந்தேரி-குர்லா சாலை, அந்தேரியில் சாகர் சாலை, வில்லே பார்லேயில் சாகர் உயர்த்தப்பட்ட அணுகல் சாலை மற்றும் பாந்த்ராவில் சுவாமி விவேகாநந்தா சாலைகளும் இணைகிறது. இதனையும் காண்கமேற்கோள்கள்
}} |
Portal di Ensiklopedia Dunia