மீரா-பய்ந்தர்
மீரா பயந்தர் (Mira-Bhayandar) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் அமைந்த பெரிய நகரங்களில் ஒன்றாகும். 79 வார்டுகளும், 79.4 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும் கொண்ட மாநகராட்சியான இந்நகரம்[1] மும்பை பெருநகரப் பகுதியாகும். இந்நகரம் சால்செட் தீவிற்கு வடக்கில் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 1,87,059 வீடுகள் கொண்ட மீரா-பயாந்தர் மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 8,09,378 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 429,260 மற்றும் 380,118 பெண்கள் ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 898 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 88,015 - 10.87% ஆகும். சராசரி எழுத்தறிவு 90.98% ஆகும். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 68.96%, இசுலாமியர்கள் 16.28%, பௌத்தர்கள் 1.86%, சமணர்கள் 5.67%, சீக்கியர்கள் 0.53%, கிறித்துவர்கள் 6.01% மற்றும் பிறர் 0.68% ஆக உள்ளனர்.[2] மேற்கோள்கள்வெளி இணைப்புகள்}} |
Portal di Ensiklopedia Dunia