1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை
1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை (1950 India-Nepal Treaty of Peace and Friendship) நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே அமைதி மற்றும் நட்பை தொடர்ந்து பேணுவதற்கு, 31 சூலை 1950 அன்று ஏற்படுத்திக் கொண்ட இருதரப்பு ஒப்பந்தம் ஆகும். இந்த உடன்படிக்கையில் நேபாளப் பிரதமர் மோகன் சம்செர் ஜங் பகதூர் ராணா மற்றும் இந்தியத் தூதுவர் சந்திரேஷ்வர் நாராயணன் சிங் ஆகியோர் உடன்படிக்கையில் கையொப்பமிட்டனர். [1] இந்த உடன்படிக்கை ஏற்பட்ட மூன்று மாத காலத்தில் நேபாளத்தின் பரம்பரை முதலமைச்சர்களான ராணா வம்சத்தினர் ஆட்சி முடிவிற்கு வந்தது. இந்த உடன்படிக்கையின் படி, இரு நாட்டு மக்களும் நேபாளத்திலும், இந்தியாவிலும் கடவுச்சீட்டு மற்றும் விசா இன்றி பயணிக்க வழிவகை செய்தது.[2] இந்த உடன்படிக்கையால் கோர்க்கா மக்கள் இந்திய இராணுவத்தில் தொடர்ந்து பணியாற்ற முடிந்தது. நேபாள மன்னர் 1952-இல் கொண்டு வந்த நேபாள குடியுரிமைச் சட்டத்தின் கீழ் குறிப்பாக பிகார் மாநில இந்தியர்கள் நேபாளத்தின் தராய் பிரதேசத்தில் குடியேறவும், நேபாள குடியுரிமை பெறவும் வழிவகை செய்தது. இதனையும் காண்கவெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia