நேபாள நாடாளுமன்றம்
நேபாள நாடாளுமன்றம், தேசிய சபை, (மேலவை) மற்றும் பிரதிநிதிகள் சபை (கீழவை) எனும் ஈரவைகள் கொண்டது. நாடாளுமன்றத்தின் அமைப்பும் & பதவிக் காலமும்2015 நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் படி, நாடாளுமன்றம் ஈரவைகள் கொண்டது.[2]
இந்த 59 உறுப்பினர்களில் 3 உறுப்பினர்கள் நேபாளக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். மீதமுள்ள 56 உறுப்பினரகள் ஏழு மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் மேயர் மற்றும் துணை மேயர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏழு மாநிலத்திலிருந்து எட்டு உறுப்பினர்கள் வீதம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஒரு மாநிலத்திலிருந்து தேர்ந்தேடுக்கப்படும் எட்டு உறுப்பினர்களில் மூன்று பெண்களுக்கு மற்றும் ஒரு தலித் அல்லது மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. வரலாறு2002ல் நேபாளத்தின் முன்னாள் நாடாளுமன்றம், மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் நாடளாவிய கலவரங்களை அடக்க இயலாதபடியால், நேபாள மன்னர் ஞானேந்திரா, நாடாளுமன்றத்தை 2002ல் கலைத்தார். 2006 நேபாள ஜனநாயகப் போராட்டத்தின் விளைவாக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை நேபாள மன்னர் மீண்டும் நிறுவ அனுமதித்தார். [3]கட்க பிரசாத் சர்மா ஒளி நேபாளத்தின் பிரதம அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 15 சனவரி 2007ல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ஏப்ரல் 2008ல், 330 உறுப்பினர்கள் கொண்ட இடைக்கால இடைக்கால அரசியலமைப்பு நிர்ணயமன்றம் அமைக்கப்பட்டது. 28 மே 2008ல் நேபாள இடைக்கால் அரசியலமைப்பு நிர்ணயமன்றம், நேபாளத்தின் 238 ஆண்டு கால மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, குடியாட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கெடு காலமான இரண்டு ஆண்டு காலத்தில் அரசியலமைப்பு நிர்ணய மன்றம், நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றாத காரணத்தால், 27 மே 2012ல் கலைக்கப்பட்டது. 2013ல் நடைபெற்ற நேபாள நாடாளுமன்றத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு இந்த இரண்டாவது புதிய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது.[4] இந்த அரசியலமைப்பு நிர்ணய மன்றம் இயற்றிய நேபாள அரசியலமைப்புச் சட்டம், 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. நேபாள அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் பதவிக்காலம் 21 சனவரி 2018ல் முடிவடைந்தது.[5] நேபாள அரசியலமைப்புச் சட்டம் 20 செப்டம்பர் 2015 அன்று முதல் நடைமுறைக்கு வந்ததது. இதன் மூலம் முந்தைய 2007ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட தற்காலிக அரசியல் அமைப்பு நீக்கப்பட்டது. மேலும் நேபாள நாட்டு அரசை, நேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு என பெயரிடப்பட்டு, சமயச் சார்பற்ற நாடாக அறிவிக்கப்பட்டது. நேபாள நாடாளுமன்றத்திற்கு 2017ல் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. மக்களால் நேரடியாகவும் & விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் தேர்வு பெற்ற பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் கட்க பிரசாத் சர்மா ஒளி நேபாளத்தின் பிரதம அமைச்சராக பிப்ரவரி, 2018ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிசம்பர், 2020-இல் நேபாள பிரதமர் கட்க பிரசாத் சர்மா ஒளி தலைமையிலான அமைச்சரவை பரிந்துரையின் படி, 2020-இல் நேபாள நாடாளுமன்றத்தை குடியரசு தலைவர் கலைத்தார்.[6] [7] இச்செயல் நேபாள அரசியலமைப்புச் சட்டத்திறு எதிரான செயல் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட்து. பிப்ரவரி 2021இல் நேபாள நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து, 15 நாட்களில் நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. [8][9] இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia