நேபாள மாநில சட்டமன்றம்
நேபாள மாநில சட்டமன்றம் ( Pradesh Sabha or Provincial Assembly), நேபாள மாநிலங்கள் ஓரவை முறைமை கொண்ட சட்டமியற்றும் அதிகாரம் கொண்டது.[1] 2015 நேபாள அரசியலமைச் சட்டத்தின் பகுதி 14, விதி 176ன் படி நேபாள நாட்டின் ஏழு மாநிலங்களில் ஓரவை முறைமை கொண்ட மாநில சட்டமன்றங்கள் நிறுவ வகை செய்யப்பட்டுள்ளது. [2] ஏழு மாநிலங்களின் 550 சட்டமன்ற 550 உறுப்பினர்களில், 330 உறுப்பினர்கள் (60%) நேரடியாகவும், 220 (40%) உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர். [3] நேபாள சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் ஐந்தாண்டுகள் ஆகும். மாநிலங்களின் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் மாநில முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார். மேலும் மாநில சட்டமன்றங்களில் மகளிர்க்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.[4] நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து, , முதல் முறையாக, 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 ஆகிய நாட்களில் ஏழு மாநில சட்டமன்றத் தேர்தல்கள் இரண்டு கட்டங்களாக, நடைபெற்றது.[5] [6]
மாநில எண் 1 சட்டமன்றம்14 மாவட்டங்கள் கொண்ட நேபாள எண் 1ன் சட்டமன்றத்தின் 56 உறுப்பினர்கள் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கவுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்கள்தொகை விவரம்.[7] மேலும் 37 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாநில எண் 2ன் சட்டமன்றத் தொகுதிகள்எட்டு மாவட்டங்களை கொண்ட மாநில எண் 2 சட்டமன்றத்திற்கு நேரடித் தேர்தலில் 64 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 64 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டது.[7]:7மேலும் 43 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
மாநில எண் 3ன் சட்டமன்றத் தொகுதிகள்13 மாவட்டங்களைக் கொண்ட மாநில எண் 3 வாக்காளர்களால் நேரடித் தேர்தல் மூலம் 66 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கிறது. மேலும் 44 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
மாநில எண் 4 - சட்டமன்றத் தொகுதிகள்10 மாவட்டங்கள் கொண்ட மாநில எண் 4, நேரடித் தேர்தல் முறையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 36 தொகுதிகள் கொண்டது. மேலும் 21 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
மாநில எண் 5 - சட்டமன்றத் தொகுதிகள்12 மாவட்டங்கள் கொண்ட மாநில எண் 5, நேரடித் தேர்தல் முறையில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 52 தொகுதிகள் கொண்டுள்ளது. மேலும் 39 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்
கர்ணாலி பிரதேச சட்டமன்றத் தொகுதிகள்10 மாவட்டங்களைக் கொண்ட கர்ணாலி பிரதேச சட்டமன்றம், நேரடித் தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 24 தொகுதிகள் கொண்டுள்ளது. மேலும் 15 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாநில எண் 7 - சட்டமன்றம்ஒன்பது மாவட்டங்களைக் கொண்ட மாநில எண் 7 சட்டமன்றத்திற்கு 32 உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க 32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்டுள்ளது.மேலும் 21 உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் பெற்ற விகிதாசார வாக்குகள் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவர்.
நேபாள மாநிலங்களின் முதலாவது சட்டமன்றத் தேர்தல்கள்ஏழு நேபாள மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான முதலாவது பொதுத் தேர்தல் 26 நவம்பர் 2017 மற்றும் 7 டிசம்பர் 2017 என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இத்தேர்தல்களில் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் மற்றும் மாவோயிஸ்ட் கூட்டணி கட்சிகள் மாநில எண் 1 சட்டமன்றத்தில் தவிர மற்ற ஆறு மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளில்பெரும்பான்மையான தொகுதிகளில் வென்று ஆட்சி அமைந்தனர். நேபாளி காங்கிரஸ் அனைத்து ஏழு சட்டமன்றங்களிலும் எதிர்கட்சி தகுதியைப் பெற்றது. தேர்தல் முடிவுகளின் படி,புதிய சட்டமன்றங்கள் நிறுவப்பட்டது. குடியரசுத் தலைவரால் மாநில ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். மேலும் சட்டமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் மாநில முதலமைச்சர்கள், சட்டமன்ற அவைத் தலைவர்கள் தேர்ந்தெடுக்க்கப்பட்டனர். இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia