அருமன் வாயு
சாதாரண நிலைமைகளில் நிறமற்ற, மணமற்ற, சுவையற்ற தன்மைகளைக் கொண்டு காணப்படும் ஒற்றை மூலகத்தாலான தாக்குதிறன் குறைந்த மூலகக் குழு அருமன் வாயுக்கள் (noble gases) ஆகும். இயற்கையில் காணப்படும் ஆறு அருமன் வாயுக்கள் ஈலியம் (He), நியான் (Ne), ஆர்கான் (Ar), கிரிப்தன் (Kr), செனான் (Xe), மற்றும் இரேடான் (Rn) ஆகியவையாகும். தனிம அட்டவணையில் குழு 18க்குரிய முதல் ஆறு மூலகங்களும் அருமன் வாயுக்களுக்குரிய இயல்புகளை காட்டுகின்றன. ஆனால் இதே கூட்டத்தில் ஏழாவது ஆவர்த்தனத்திற்குரிய மூலகமாகிய உனுனோக்டியம்(Uuo) அருமன் இயல்புகளைக் காட்டாது.[1] பதிலாக குழு 14க்குரிய உனுக்குவடியம் அருமன் இயல்புகளைக் கொண்டுள்ளன.[2] அருமன் வாயுக்களின் இயல்புகள் பற்றி அணுக்கட்டமைப்பு பற்றிய புதிய கொள்கைகள் விளக்குகின்றன. இவற்றின் இறுதி இலத்திரன் ஒழுக்கு நிரம்பிய நிலையில் காணப்படும். இதன் காரணமாக இவை குறைந்தளவு இடைத்தாக்கங்களை கொண்டு காணப்படுகின்றன. இவற்றின் உருகுநிலை , கொதி நிலை என்பன நெருங்கிய வீச்சினுள்10 oC ஐ விடக் குறைந்த வேறுபட்டைக் கொண்டும் காணப்படுகின்றன. இவை சிறிய வெப்பநிலை வேறுபாட்டில் நீர்மநிலையை அடையக்கூடியதாகவும் உள்ளன. மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia