கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம்
![]() ![]() கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் (Komaram Bheem Asifabad district), இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். இப்புதிய மாவட்டம் அக்டோபர் 2016-இல் துவக்கப்பட்டது.[2] இதன் தலைமையிட நகரம் கொமாரம் பீம் ஆகும். இம்மாவட்டம் ஆதிலாபாத் மாவட்டத்தின் பகுதிகளைக் கொண்டு புதிதாகத் துவக்கப்பட்டது. [3] புவியியல்கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் வடக்கிலும், கிழக்கிலும் மகாராட்டிரா மாநிலத்தின் சந்திரபூர் மாவட்டம் மற்றும் கட்சிரோலி மாவட்டங்களும், தெற்கில் மஞ்செரியல் மாவட்டமும், மேற்கில் ஆதிலாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பெஜ்ஜூர் மற்றும் சிர்பூர் காட்டுப் பகுதியில் சிறுத்தைப் புலிகள் காணபபடுகிறது. மக்கள் தொகை2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டத்தின் மக்கள் தொகை 5,15,835 ஆகும். மாவட்ட நிர்வாகம்கொமாரம் பீம் அசிபாபாத் மாவட்டம் அசிபாபாத் மற்றும் ககாஸ்நகர் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 15 வருவாய் வட்டங்களையும்[4] கொண்டுள்ளது. வருவாய் வட்டங்கள்
இதனையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia