டெட்பூல் 2
டெட்பூல் 2 (Deadpool 2) என்பது 2018 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டெட்பூல் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து 20ஆம் சென்சுரி பாக்ஸ், மார்வெல் மகிழ்கலை, கென்றே பிலிம்ஸ், மாக்ஸிமும் எபிபோர்ட், தி டொன்னேர்ஸ் கம்பெனி, டி.எஸ்.ஜி என்டர்டெயின்மென்ட் போன்ற நிறுவனங்கள் தயாரிக்க 20ஆம் சென்சுரி பாக்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது. இது எக்ஸ்-மென் திரைப்படத் தொடரின் பதினோராவது திரைப்படமும் 2016 ஆம் ஆண்டு வெளியான டெட்பூல் திரைப்படத்தின் தொடர்ச்சி ஆகும். சைமன் கின்பெர்க், ரையன் ரெனால்ட்சு, லாரன் ஷுலர் டோனர் போன்றோர் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ரையன் ரெனால்ட்சு, ஜோஷ் புரோலின், மோரேனா பாக்கரின், ஜூலியன் டெனிசன், ஜாஸி பீட்ஸ், டி. ஜே. மில்லர், பிரையன்னா ஹில்டெபிராண்ட் மற்றும் ஜாக் கெஸி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டெட்பூல் 2 திரைப்படம் ஐக்கிய அமெரிக்காவில் மே 18, 2018 அன்று 20ஆம் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.[4] இந்த திரைப்படம் உலகளவில் $785 மில்லியனை வசூலித்தது. இது 2018 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மிக அதிக வசூல் செய்த படமாகவும், எக்ஸ்-மென் தொடரில் அதிக வசூல் செய்த படம் ஆகும். அடுத்த ஆண்டு ஜோக்கர் என்ற திரைப்படம் இதை விட அதிக வசூல் செய்த ஆர்-மதிப்பிடப்பட்ட படம் ஆகும். இந்த படம் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, அதன் நகைச்சுவை, நடிகர்கள், கதை மற்றும் அதிரடி காட்சிகளைப் பாராட்டியவர், ஆனால் அதன் தெளிவற்ற திரைக்கதையை விமர்சித்தார்கள். கதைசுருக்கம்வெற்றிகரமாக இரண்டு ஆண்டுகளுக்கு கூலிப்படையில் வேலை செய்த பிறகு வேட் வில்சன் பழிவாங்க வந்தவரின் தாக்குதலில் நேசித்த பெண்ணை இழக்கிறார் . இதனால் மனம் உடைந்து உயிர்விட துணியும்போது நண்பர் கொலஸஸால் காப்பாற்றப்படுகிறார் .சக்திவாய்ந்த மனிதர்களால் உருவான எக்ஸ் மென் அமைப்பிலும் இணைகிறார். ஒரு கட்டத்தில் ரெசெல் காலின்ஸ் என்ற சக்திவாய்ந்த கோபக்கார சிறுவனை காப்பாற்றும் முயற்சியில் ரெசலுக்கு துன்பத்தை கொடுத்த அமைப்பினரை கோபமாக தாக்க முயற்சிக்கிறார் , இதனால் எக்ஸ் மென் அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு ஐஸ் பாக்ஸ் என்ற சிறப்பு சக்திகள் உளவர்களை அடைக்கும் சிறைச்சாலையில் வேட் வில்சனும் ரெசெல் காலின்சும் அடைக்கப்படுகின்றனர். அங்கே கேபிள் என்ற எதிர்காலத்தில் இருந்து காலத்தை கடந்து வந்த மோசமான மனிதரின் பழிவாங்கும் முயற்சியில் இருந்து காப்பாற்றுகிறார். இதனால் மோசமான காயங்களுடன் தப்பிச்சென்ற வேட் வில்சன் ரெசெல் காலின்ஸை காப்பாற்ற எக்ஸ் போர்ஸ் என்ற சக்திவாய்ந்த மனிதர்களின் குழுவை உருவாக்கினாலும் வில்சன் மற்றும் அதிர்ஷ்டத்தை சக்தியாக கொண்ட டோமினோ தவிர அனைத்து உறுப்பினர்களும் விமானத்தில் இருந்து தரையில் பாரா சூட் மூலம் பறந்து வரும் இந்த முயற்சியில் எங்காவது மோசமான முறையில் மோதிக்கொள்கின்றனர் . இறுதியில் டொமினோ மற்றும் வில்சன் ரெசலை காப்பாறினாலும் ரெசல் அவனுடைய பழிவாங்கும் குணத்தால் ஜகர்நேட் என்ற பலம்வாய்ந்த சகித்திவாய்ந்த மனிதனின் உதவியுடன் அவனை துன்பப்படுத்திய மோசமான அமைப்பினரை அவனுடைய நெருப்பு பயன்படுத்தும் சக்தியால் அழிக்க திட்டமிடுகிறான், இந்நிலையில் இந்த முயற்சியாலும் மோசமாக காயப்பட்ட வில்சனை கேபிள் சந்திக்கிறார். எதிர்காலத்தில் இந்த ரெசல் அவருடைய குடும்பத்தை தாக்கி அழித்ததையும் அதனால்தான் இந்த கடந்த காலத்தில் அவனை தாக்க வந்ததாகவும் சொல்கிறார். ஆனால் வில்சன் வன்முறை சரியானது இல்லை என ரெசலுக்கு புரியவைக்க முயற்சிப்பதை சொல்கிறார், ஆனால் கேபிள் அவருடைய முடிவை விட்டுக்கொடுக்கவில்லை , இந்நிலையில் ரெசல் தாக்கப்போகும் அந்த மோசமான அமைப்பை சேர்ந்தவர்களுக்கும் கேபிள், வில்சன் , டொமினோ , கொலஸஸின் அணிக்கும் நடந்த மோதலில் ரெசலுடன் பேசும் வில்சன் வன்முறை சரியான முடிவு இல்லை என்பதை புரியவைத்தாலும் ரெசல் மறுக்கிறான் , ஆனால் அவனுக்கு புரியவைக்க சக்திகளை மறையவைக்கும் கருவி அணிந்து எந்த சக்திகளும் சாதாரண மனிதனாக மாறி ரெசலை தாக்கவந்த துப்பாக்கி குண்டை தடுக்க வில்சன் அவருடைய உயிரை தியாகம் செய்கிறார், சம்பவத்தால் ரேசல் மனம் திருந்தி இருந்தாலும் வில்சன் மீது பரிதாபப்பட்டு கேபிள் கொஞ்சம் நேரத்துக்கு காலத்தை கடந்து அந்த பாதிப்பு வில்சனை தாக்காதவாறு சம்பவங்களை மாற்றி வில்சனை காப்பாற்றுகிறார், பின்னர் இந்த சக்திவாய்ந்த மனிதர்கள் எல்லோரும் ஒரு நல்ல தோழமையான அமைப்பாக மாற முடிவு எடுக்கின்றனர் வில்சன் கேபிளின் காலத்தை கடக்கும் கருவியுடன் கடந்த கால சம்பவங்களை மாற்றி நேசித்த பெண்ணை காப்பாற்றுகிறார் . தயாரிப்புடெட் பூலிற்கான தொடர்ச்சியான திரைப்படத்தை உருவாக்கும் திட்டம் பிப்ரவரி 2016 இல் உறுதி செய்யப்பட்டது. ரெனால்ட்ஸ், ரீஸ், வர்னிக் மற்றும் இயக்குநர் டிம் மில்லரின் அசல் படைப்பாக்க குழு இரண்டாவது படத்திற்குத் திரும்புவதற்கு விரைவாக அமைக்கப்பட்டிருந்தாலும், ரேனோல்ட்ஸ் உடன் படைப்பு வேறுபாடுகள் காரணமாக 2016 அக்டோபரில் மில்லர் அந்த திட்டத்தை விட்டு வெளியேறினார், விரைவில் லெயிச்சினால் மாற்றப்பட்டார். கேபிள் இன் பாத்திரத்தை நிரப்ப ஒரு விரிவான நடிப்பு தேடலுக்கு பின்னர் ஜோஸ் ப்ரோலின் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜூன் முதல் அக்டோபர் 2017 வரை பிரித்தானிய கொலம்பியாவில் படப்பிடிப்பு நடந்தது. இந்தத் திரைப்படமானது ஸ்டண்ட் வோமன் ஜோயி "எஸ்.ஜே." ஹாரிஸ் என்பவருக்கு அர்ப்பணிக்கப்பட்டது, அவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ஒரு மோட்டார் சைக்கிள் விபத்தில் இறந்தார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia