திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி (Tiruchirappalli City Municipal Corporation) இந்தியாவின் மாநிலமான தமிழகத்தின் மாவட்டமான திருச்சிராப்பள்ளி மாவட்ட மாநகராட்சியாகும். இது உள்ளாட்சி அமைப்பின்படி ஒரு மாநகராட்சி ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்த மூன்றாவது மிகப்பெரிய மாநகராட்சி இதுவே ஆகும். இந்த மாநகராட்சி 167.23 ச.கி.மீட்டர் கொண்ட பரந்து விரிந்த தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி ஆகும். இது முதன்முதலில் நகராட்சியாக நிறுவப்பட்டது 08.07.1866. பின் மாநகராட்சியாக 01.06.1994 அன்று தரம் உயர்த்தப்பட்டது. இந்த மாநகராட்சியை ஒட்டியுள்ள துவாக்குடி, திருவெறும்பூர் நகராட்சிகளை திருச்சியுடன் இணைக்க அரசு பரிசீலனை செய்து வருகிறது. இதனடிப்படையில் இந்த மாநகராட்சி நான்கு மிகப்பெரிய மண்டலங்களையும் நூறு (100) வார்டுகளையும் கொண்டுள்ளது. இந்த மாநகராட்சி சென்னை, கோயம்புத்தூர் மாநகராட்சிகளைப் போலவே பல நகராட்சிகளைக் கொண்டுள்ளது. அதனடிப்படையில் அரியமங்கலம்,அபிஷேகபுரம்,பொன்மலை, திருவரங்கம், துவாக்குடி, ஆகிய நகராட்சிகளையும் திருவெறும்பூர் பேரூராட்சிகளையும் உள்ளடக்கி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பெருநகர மாநகராட்சியாக இல்லாத போதிலும் ஆண்டு வரி வருவாய் 615 கோடி ரூபாய் ஈட்டுகிறது. இது தமிழக மாநகராட்சிகளின் வரி வருவாயில் மூன்றாவது இடத்தைக் கொண்டுள்ளது. மாநகராட்சிப் பகுதிகள்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி
மாநகராட்சித் தேர்தல், 20222022-ஆம் ஆண்டில் திருச்சி மாநகராட்சியின் 65 மாமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் திமுக கூட்டணி 59 வார்டுகளையும், அதிமுக 3 வார்டுகளையும், அமமுக 1 வார்டையும், சுயேச்சைகள் 2 வார்டுகளையும் கைப்பற்றினர். மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலில், மேயராக திமுகவின் மு. அன்பழகனும் , துணை மேயராக திவ்யா தனக்கோடியும் வெற்றி பெற்றனர்.[1] மாநகராட்சி சிறப்பு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலங்கள்திருச்சிராப்பள்ளி மாநகராட்சியானது சுமார் நான்கு மண்டலங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் திசைகளை வகைப்படுத்தி அமையப்பெற்றுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் அதன்கீழ் இருபத்து ஐந்து வார்டுகளைக் கொண்டுள்ளது. மண்டலங்கள் கீழ்வருமாறு: என நான்கு மண்டலங்களைக் கொண்டுள்ளது. இவைகள் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாநகரத் தந்தைதிருச்சிராப்பள்ளி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 1996-இல் மாநகரத் தந்தை பதவிக்கான முதல் தேர்தல் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மக்கள் தொகைஇந்திய 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, இந்நகரின் மக்கள்தொகை 8,47,387 ஆகும். இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்சிராப்பள்ளி மக்களின் சராசரி கல்வியறிவு 91.38% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 94.85%, பெண்களின் கல்வியறிவு 88.01% ஆகும். இது இந்தியத் தேசிய சராசரிக் கல்வியறிவான 59.5% விடக் கூடியதாகும். திருச்சிராப்பள்ளி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரும் மாநகரப்பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி, இந்திய அளவில் 51-ஆவது இடத்தில் உள்ளது. 2011இல் நடந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின் துவக்கநிலை மதிப்பீடுகளின்படி மாநகரப்பகுதியின் மக்கள்தொகை 8,47,387 ஆகவும். கூட்டுநகரப்பகுதியின் மக்கள்தொகை 10,22,518 ஆகவும் உள்ளது. திருச்சிராப்பள்ளியில் 1,62,000 மக்கள் 286 குடிசைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் பெரும்பான்மையினராக இருப்பினும் கணிசமான அளவில் கிறித்தவர்களும் முசுலிம்களும் வாழ்கின்றனர். குறைந்த எண்ணிக்கையில் சீக்கியர்களும் சமணர்களும் இங்குள்ளனர். மிகப் பரவலாகப் பேசப்படும் மொழியாகத் தமிழ் விளங்கினாலும் கணிசமான மக்கள் தெலுங்கு, சௌராட்டிர மொழி மற்றும் கன்னட மொழி பேசுகின்றனர். சௌராட்டிர மொழியை 16-ஆவது நூற்றாண்டில் குசராத்திலிருந்து குடிபெயர்ந்து வாழும் பட்டு நூல்காரர்கள் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். மேலும் இங்கு குறிப்பிடத்தக்க அளவில் புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் நகரத்தின் சுற்றுப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள ஏதிலிகள் முகாம்களில் வாழ்கின்றனர். இங்குள்ள தென்னக இரயில்வேயின் மண்டல தலைமையகத்தையொட்டி கணிசமான ஆங்கிலோ இந்தியர்கள் வாழ்கின்றனர். திருச்சிராப்பள்ளி மெட்ரோ இரயில் சேவைதமிழ்நாட்டிலேயே சென்னைக்கு அடுத்து அதிக அளவில் சர்வதேச விமானங்கள் இங்குதான் தரையிறக்கப்படுகின்றன.[சான்று தேவை] இதனால் நாளுக்கு நாள் மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் நகரமயமாதல் போன்ற பல பிரச்சனைகளை திருச்சி மாநகரம் எதிர்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. எனவே இங்கு மெட்ரோ இரயில் சேவை துவங்க வேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வலுத்து வருகிறது. 2021 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் திருச்சியில் மெட்ரோ இரயில் சேவை துவங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதைத் தவிர மத்திய அரசு, தமிழகத்தில் திருச்சிராப்பள்ளி, மதுரை, திருநெல்வேலி, சேலம் ஆகிய மாநகரங்களில் சிறிய ரக மெட்ரோ இரயில் சேவையை துவங்கலாம் என பரிசீலனை செய்து வருகிறது. திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பேருந்து நிலையங்கள்இந்த மாநகரம் தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் போக்குவரத்து மிக மிக ஏராளம். அது சாலை மார்க்கமாக இருந்தாலும், வான்வழி மார்க்கமாக இருந்தாலும், இரயில் போக்குவரத்தாக இருந்தாலும் சரி. இந்த மாநகரம் மூன்று பேருந்து நிலையங்களை கொண்டுள்ளது. அவை
சோழ நாட்டின் தலைநகரம்இது தற்போதைய சோழநாட்டின் மிகப்பெரிய நகரமாக திருச்சி உள்ளது. இதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி என அனைத்தையும் உள்ளடக்கிய பகுதியாக இருந்துள்ளது. மேற்கோள்கள்வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia