சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி
சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி (மெயின் கார்டு கேட் பேருந்து நிலையம்) என்பது திருச்சிராப்பள்ளியில் உள்ள பேருந்து நிலையங்களில் ஒன்று. மற்றொன்று மத்திய பேருந்து நிலையம் .[ 3] சத்திரம் பேருந்து நிலையம் புனித சூசையப்பர் கல்லூரிக்கு அருகில் சிந்தாமணியில் அமைந்துள்ளது.
கண்ணோட்டம்
1979 முதல் செயல்பட்டு வரும்[ 4] இந்த பேருந்து நிலையம் அருகிலுள்ள சின்னையா பிள்ளை சத்திரம் என்பதிலிருந்து இதன் பெயரை பெற்றது. [ 2] இந்த பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகளையும் சிற்றுந்துகளையும் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் வடக்கு, கிழக்கு, மற்றும் மேற்கு பகுதிகளுக்கு இயக்குகிறது.[ 5] [ 6] [ 7]
சேவைகள்
திருச்சியின் வடக்கு மற்றும் மேற்கே செல்லும் உள்ளூர் பேருந்துகள் மற்றும் வெளியூர் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் இங்கிருந்து இயக்கப்படுகின்றன.
சென்னை , கரூர் , ஈரோடு , திருப்பூர் , கோவை , ஊட்டி , முசிறி , நாமக்கல் , சேலம் , பாண்டிச்சேரி போன்ற தமிழக பெரும் நகரங்களுக்கு செல்லும் சில பேருந்துகள் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் வழியாக பயணிகளை ஏற்றி கொண்டு செல்கின்றன.
மேலும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து குளித்தலை , கரூர் , முசிறி , தொட்டியம் , காட்டுப்புத்தூர் , மோகனூர் , வேலூர் , தாத்தையங்கார்பேட்டை , புளியஞ்சோலை , துறையூர் , தம்மம்பட்டி , ஆத்தூர் , வாழப்பாடி , சேலம் , பெரம்பலூர் , சின்னசேலம் , கள்ளக்குறிச்சி , தொழுதூர் , லப்பைகுடிக்காடு , லால்குடி , புள்ளம்பாடி , திருவையாறு , தஞ்சாவூர் , கல்லக்குடி , கீழப்பழூர் , அரியலூர் , செந்துறை , பெண்ணாடம் , விருத்தாசலம் , ஜெயங்கொண்டம் , கங்கைகொண்டசோழபுரம் , சிதம்பரம் , ஆண்டிமடம் , ஸ்ரீமுஷ்ணம் , பண்ருட்டி , நெய்வேலி , வடலூர் , குறிஞ்சிப்பாடி , குள்ளஞ்சாவடி , கடலூர் , பாண்டிச்சேரி போன்ற திருச்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்கு சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் தினசரி இயக்கப்படுகின்றன.
மேலும் பாலக்காடு , பெங்களூர் , திருப்பதி , ஐதராபாத்து போன்ற பக்கத்து மாநிலங்களும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.[ 4]
நடைமேடை
செல்லும் இடம்
1
அரியமங்கலம் , காட்டூர் , திருவெறும்பூர் , பாய்லர் , துவாக்குடி , HAPP, நவல்பட்டு மற்றும் பூதலூர்
2
கீரனூர் மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், விராலிமலை மார்க்கமாக செல்லும் உள்ளூர் பேருந்துகள், திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் , திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம் , உறையூர் மற்றும் பொன்மலை
3
சங்கிலியாண்டபுரம் , செந்தண்ணீர்புரம், கே. கே. நகர் மற்றும் வயலூர்
4
சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர்
5
முக்கொம்பு , பெட்டவாய்த்தலை , குளித்தலை மற்றும் கல்லணை , பூண்டி மாதா பேராலயம்
6
இலால்குடி
இலால்குடி தடத்துக்குள் நுழையும் பேருந்துகள்.
இணைப்பு
சத்திரம் பேருந்து நிலையம் தென்மேற்கில் 1.3 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி கோட்டை ரயில் நிலையத்துடனும் , தென்கிழக்கில் 1.4 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள திருச்சிராப்பள்ளி டவுன் ரயில் நிலையத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில்
2013 ஆம் ஆண்டு வெளிவந்த சத்திரம் பேருந்து நிலையம் என்ற தமிழ்த்திரைப்படத்தில் இப்பேருந்து நிலையம் காட்சிப்படுத்தப்பட்டது.[ 8] [ 9]
மேலும் பார்க்க
சான்றுகள்
இணைப்புகள்