பொன்மலை
பொன்மலை திருச்சிராப்பள்ளியின் நான்கு மண்டலங்களில் ஒன்றாகும். இருப்பு வழி குடியிருப்பு மற்றும் இருப்பு வழி பணிமனை அருகில் உள்ளது.[1] மக்கள் தொகையியல்பெரும்பாலான பகுதி பொன்மலை இருப்பு வழி பணிமனை மற்றும் அதன் ஊழியர்களுக்கான குடியிருப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புறங்கள்
இதன் சுற்றுப்புறங்கள் கல்கண்டார் கோட்டை, கீழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி, பொன்மலைபட்டி, கொட்டப்பட்டு, சுப்பிரமணியபுரம், சங்கிலியாண்டபுரம், செந்தநீர்புரம், அம்பிகாபுரம், தங்கேஸ்வரி நகர், முன்னாள் படைத்துறையினர் குடியிருப்பு ஆகும். கோல்டன் ராக் குடிமக்களில் பெரும்பாலானவர்கள் தென்னக இரயில்வே ஊழியர்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெறும் இதன் சந்தை நன்கு அறியப்பட்டதாகும், இது 1926 இல் பிரித்தானிய ஆட்சியின் போது நிறுவப்பட்டது.[2][3][4] போக்குவரத்துஅருகிலுள்ள தொடருந்து நிலையங்கள் பொன்மலை (GOC), மஞ்சத்திடல் (MCJ) மற்றும் திருச்சிராப்பள்ளி சந்திப்பு (TPJ). நல்வாழ்வுஇது இந்திய இரயில்வேக்கு சொந்தமான மாநகரத்தின் பழமையான மருத்துவமனைகளில் ஒன்றான, கோட்ட இருப்பு வழி மருத்துவமனையை கொண்டுள்ளது. இவற்றையும் பார்க்கவும்குறிப்புதவி
|
Portal di Ensiklopedia Dunia