யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப்(Jacobus Henricus "Henry" van 't Hoff, Jr)என்பவர் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த (30 ஆகத்து 1852 - 1 மார்ச் 1911) ஒரு டச்சு இயற்பிய வேதியலாளர் ஆவார். அவரது காலத்தில் இவர் மிகத் திறமையான கோட்பாட்டு வேதியலாளர் எனக் கருதப்பட்டார்.வான் தோஃப் வேதியலுக்கான நோபல் பரிசு வரலாற்றில் 1901 ஆம் ஆண்டு வேதியியலுக்கான முதல் நோபல் பரிசை பெற்றார்.[2][3][4] வான் தோஃப் அவர்கள் நவீன வேதியல் கோட்பாடுகளான வேதி நாட்டம், வேதியியற் சமநிலை, வேதி வினைவேகவியல் மற்றும் வேதி வெப்ப இயக்கவியல் ஆகியவற்றின் முன்னோடி என்றழைக்கலாம். 1874 ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட நான்முக கார்பன் அணு பற்றிய கோட்பாடு முப்பரிமாண வேதியியல் துறை உருவாக வித்திட்டது. 1875 ஆம் ஆண்டு அலீன், குமுலீன் மற்றும் அதன் அச்சுக்களின் சமச்சீரின்மை போன்றவைகளின் கட்டமைப்பை பற்றி ஊகித்துச் சொன்னார்.[5] இயற்பிய வேதியியல் துறையை உருவாக்கியவர் என்றும் அறியப்படுகிறார்.[6][7][8]
மேற்கோள்கள்
↑Ramberg, Peter J. (2017). Chemical Structure, Spatial Arrangement: The Early History of Stereochemistry, 1874–1914. Routledge. ISBN9781351952453.
↑Kreuzfeld, HJ; Hateley, MJ. (1999). "125 years of enantiomers: back to the roots Jacobus Henricus van 't Hoff 1852–1911". Enantiomer4 (6): 491–6. பப்மெட்:10672458.