வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம்வயநாடு பாரம்பரிய அருங்காட்சியகம் [1] (Wayanad Heritage Museum) இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள வயநாடு மாவட்டம் சுல்தான் பத்தேரிக்கு 12 கி.மீ. தொலைவில் இருக்கும் அம்பாலாவயல் கிராமத்தில் அமைந்துள்ளது [2]. மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சில் மூலம் அருங்காட்சியகம் நிர்வகிக்கப்படுகிறது. பழங்குடிகளின் நினைவுச்சின்னங்கள் மற்றும் கலைப்பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வெரசுமிருதி, கோத்ராசுருமிதி, தேவாசுமிருதி, சீவாசுமிருதி என நான்கு பிரிவுகளாக அருங்காட்சியகம் பிரிக்கப்பட்டுள்ளது. கற்காலம் தொடங்கி 17 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தைச் சேர்ந்த பல்வேறு வகையான தொல் பொருட்கள் இப்பிரிவுகள் ஒவ்வொன்றிலும் சேகரித்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரண பழங்குடியினர் வாழ்வில் பயன்படுத்தப்பட்ட கலைப்பொருட்கள் உட்பட, நினைவுச்சின்னங்கள் கற்களால் அலங்கரிக்கப்பட்ட வீரர்களின் கல்லறைகள், மற்றும் சுடுமண் சிலைகள் உட்பட்ட தொல்லியற் பொருட்கள் இவற்றில் அடங்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia