வாரங்கல் கிராமபுற மாவட்டம்
![]() ![]() வாரங்கல் கிராமபுற மாவட்டம் (Warangal Rural district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வாரங்கல் நகரம் ஆகும்.[1] வாரங்கல் மாவட்டத்தின் கிராமபுற பகுதிகளைக் கொண்டு இம்மாவட்டம் புதிதாக அக்டோபர், 2016-இல் துவக்கப்பட்டது.[2] வாரங்கல் மாவட்டத்தின் நகர்புறப் பகுதிகளைக் கொண்டு அனுமக்கொண்டா மாவட்டம் அக்டோபர், 2016ல் துவக்கப்பட்டது. மக்கள் தொகையியல்2175.50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] வாரங்கல் கிராமபுற மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 7,16,457 ஆகும்.[3] இம்மாவட்ட மக்களில் பெரும்பான்மையினர் தெலுங்கு மொழியை பேசுகின்றனர். இசுலாமியர்களில் சிலர் உருது மொழி பேசுகின்றனர். மாவட்ட நிர்வாகம்வாரங்கல் கிராமப்புற மாவட்டம் நரசம்பேட்டை மற்றும் வாரங்கல் (கிராமப்புறம்) என இரண்டு வருவாய்க் கோட்டங்களைக் கொண்டுள்ளது. இக்கோட்டங்கள் 15 வருவாய் வட்டம்|மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2] மண்டல்கள்வாரங்கல் கிராமப்புற மாவட்டத்தின் வருவாய் கோட்டத்தில் உள்ள மண்டல்கள்:
இதனையும் காண்கமேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia