உணவு ஒளிப்படவியல்![]() உணவு ஒளிப்படவியல் (Food photography) என்பது உணவின் கவர்ச்சிகரமான நிலைப்பட ஒளிப்படங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு நிலைப்படத்தின் ஒளிப்பட வகையாகும். வணிக ஒளிப்படத்தின் ஒரு சிறப்பு அம்சமாக, அதன் வெளியீட்டில் விளம்பரங்கள், பத்திரிகைகள், சிப்பமிடுதலில், உணவு வகைப் பட்டியலிடுதலில் அல்லது சமையல் புத்தகங்களில் என பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. தொழில்முறை உணவு ஒளிப்படம் எடுத்தல் என்பது ஒரு கூட்டு முயற்சியாகும், பொதுவாக ஒரு கலை இயக்குநர், ஒரு ஒளிப்படக் கலைஞர், ஒரு உணவு ஒப்பனையாளர், ஒரு தட்டுமுட்டு ஒப்பனையாளர் மற்றும் அவர்களின் உதவியாளர்களை உள்ளடக்கியது.சமூக ஊடகங்களின் வருகையுடன், பொழுதுபோக்கி உணவு ஒளிப்படவியல் உணவகம் மற்றும் உணவகவாசிகளிடையே பிரபலமடைந்துள்ளது.[1] விளம்பரத்ற்கான, உணவு ஒளிப்படவியலில் பெரும்பாலும் - சில சமயங்களில் சர்ச்சைக்குரியதாகவும் - விளம்பரப்படுத்தப்பட்ட உணவின் கவர்ச்சியையோ அல்லது அளவையோ, குறிப்பாக துரித உணவையோ மிகைப்படுத்தப் பயன்படுகிறது.[2] வரலாறு![]() உணவை ஒரு கருப் பொருளாகக் காட்டிய முதல் அறியப்பட்ட ஒளிப்படம் 1845 ஆம் ஆண்டு வில்லியம் என்றி ஃபாக்ஸ் டால்போட் எடுத்த குழிப்பேரி மற்றும் செந்தாழை பழங்களைக் காட்டும் டகேர் ஒளிப்பட முறை ஆகும்.[3] நீண்ட காலமாக, உணவுப் ஒளிப்படங்கள் மக்கள் தங்கள் உணவை எதிர்கொள்ளப் பழகிய விதத்தைப் போலவே எடுக்கப்பட்டன: அதாவது, ஒரு மேசை அமைப்பில் வைக்கப்பட்டு, மேல்நோக்கி, சாப்பிடுபவரின் பார்வையில் இருந்து எடுக்கப்பட்டன.[4] அதன்படி ஒப்பனையாளர்கள் உணவை மேலே இருந்து பார்க்க நன்றாகத் தோன்றும் வகையில் ஏற்பாடு செய்தனர், உணவுகள் தட்டில் தட்டையாகவும், ஒன்றிலிருந்து ஒன்று தெளிவாகப் பிரிக்கப்பட்டதாகவும் அமைக்கப்பட்டன.[5] சமூக ஊடக நிகழ்வாக![]() சமூக ஊடகங்களின் வளர்ச்சியாலும், தாமி பயன்பாடுகளாலும், அமெச்சூர் உணவு ஒளிப்படம் எடுத்தல் அதிகரித்துள்ளது. உணவகங்களில் தங்கள் உணவை மொபைல் போனைப் பயன்படுத்தி ஒளிப்படம் எடுப்பது, இன்ஸ்ட்டாகிராம், முகநூல் போன்ற தளங்களில் பகிர்வதற்காக அல்லது உணவு வலைப்பதிவிற்காக ஒரு பிரபலமான போக்கு உருவாகியுள்ளது. இந்த நடைமுறை சில நேரங்களில் "படக்கருவி முதலில் சாப்பிடுகிறது" என்று குறிப்பிடப்படுகிறது.[6] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia