வெளிர் நிற ஒளிப்படவியல்![]() வெளிர் நிற ஒளிப்படவியல்அல்லது உயர் விசை ஒளிப்படம் எடுத்தல் (High-key photography) என்பது பிரகாசமான ஒளியைப் பயன்படுத்தி மென்மையான நிழல்கள் மற்றும் சில இருண்ட தொனிகளுடன் கூடிய ஒளியில், மென்னடைவாய்ந்த படங்களை உருவாக்கும் ஒரு பாணியின் ஒளிப்படமாகும். இது பெரும்பாலும் உருவப்படங்கள், ஒய்யாரம் மற்றும் தயாரிப்பு ஒளிப்படம் எடுப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.[1] ஒளிப்படம் எடுப்பதில் வெளிர் நிற (அதிகப்படியான) வெளிப்பாடு என்பது பொதுவாக ஒரு மோசமான விளைவாகக் கருதப்படுகிறது - அது அணைத்து மதிப்பீத்திலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. பரந்த பின்னணிகள் மற்றும் மேகமூட்டமான வானங்களுக்கும் இதுவே உண்மை. ஆனால் சில நேரங்களில், இந்த "உயர்-திறந்த" தோற்றம் ஒரு ஒளிப்படத்திற்குத் தேவையானதாக இருக்கலாம்.[2] சில ஒளிப்படங்களை வெளிர் நிறம் அல்லது அடர் நிறம் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஒளிப்படவியலில் அதி வெளிப்பாடு (வெளிரொளி (Over exposure) மற்றும் குறை வெளிப்பாடு (அடரொளி (Under exposure) போன்ற குறைபாடுடைய ஒளிப்படக் கைப்பற்றல் என்பது வேறு. மேலும் இந்த வார்த்தையின் பயன்பாடு குறித்து ஒரு ஐயம் இருக்கும். பெரும்பாலும் இது வேண்டுமென்றே அதிகமாக வெளிப்படுத்தப்பட்ட அல்லது குறைவாக வெளிப்படுத்தப்பட்ட ஒளிப்படம் போல் தெரிகிறது. மற்ற சந்தர்ப்பங்களில், இந்த ஒளிப்படங்கள் வெளிர் தொனிகள் அல்லது அடர் தொனிகளை மட்டுமே கொண்டிருக்கும், என்பதில் எந்த மாறுபாடும் இல்லை.[3] இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia