சமூக ஊடக உணவு ஒளிப்படவியல்![]() சமூக ஊடக உணவு ஒளிப்படவியல் (Food photography on social media); 21 ஆம் நூற்றாண்டில் சமூக ஊடகங்களின் எழுச்சியாக, உணவக வாடிக்கையாளர்கள் மற்றும் வீட்டு சமையல்காரர்கள் ஒரு உணவை சாப்பிடுவதற்கு முன்பு எண்முறை அல்லது திறன்பேசி ஒளிப்படம் எடுக்கும் நிலைக்கு வழிவகுத்தது.[1] இத்தகைய உணவு ஒளிப்படங்கள் பொதுவாக வணிக நோக்கங்களுக்காக அல்லாமல், ஒளிப்பட உணவு நாட்குறிப்புகளை வைத்திருப்பது போன்ற தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவே உள்ளன.[2] இதுபோன்ற நிகழ்விற்கு ஆங்காங்கில் "ஒளிப்படக்கருவி முதலில் சாப்பிடுகிறது" என்று குறிப்பிடப்படுகிறது, இதை வெளிப்படுத்தும் ஒளிப்படக் கலைஞர் தங்களுக்கு உணவளிப்பதற்கு முன்பு தங்கள் படக்கருவிக்கு உருவகமாக "உணவளிப்பதை" குறிக்கிறது.[3] பின்னணிஎண்முறை ஒளிப்படம் எடுப்பதற்கு முன்பு, ஒரு நபரின் உணவு மீதான ஆர்வம் புத்தகங்கள், பத்திரிகைகள் மற்றும் இரவு விருந்துகளில் மட்டுமே இருந்திருக்கலாம் என்று உணவு ஒளிப்படக் கலைஞர் டேவ் ஹேகர்மேன் கூறியுள்ளார். "எண்முறைக்கு முன்பு, தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வேறு யாரும் (என்னைத் தவிர) படத்தில் உணவைப் ஒளிப்படம் எடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை." மேலும் இன்ஸ்டாகிராம் போன்ற ஒளிப்பட சமூக ஊடகங்களின் வருகையால் மக்கள் தங்கள் தனிப்பட்ட உணவு ஆர்வங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை எளிதாக்கியது.[4] "நீ என்ன சாப்பிடுகிறாய் என்று சொல், நீ என்னவென்று நான் உனக்குச் சொல்வேன்" என்ற பிரெஞ்சு தத்துவஞானியும் நல்ல உணவைச் சாப்பிடுபவருமான ஜீன் ஆன்தெல்ம் பிரில்லாட்-சவரின் மேற்கோளின்படி, அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பதிலிருந்து அவர்கள் யார் என்பதைக் காட்டும் ஒரு சுய பிரதிநிதித்துவ வடிவமாக ஒளியுமிழ் உணவு நாட்குறிப்பை வைத்திருப்பதாக கருதப்படுகிறது.[2] இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia