திறன்பேசி ஒளிப்படவியல்![]() திறன்பேசி ஒளிப்படவியல் (Smartphone Photography) என்பது, இடம்பெயர் அலைப்பேசி சாதனத்தைப் பயன்படுத்தி அழகான ஒளிப்படங்களை எடுப்பதில் கவனம் செலுத்துகிறது. தற்போதுள்ள எந்த திறன்பேசி ஒளிப்படக்கருவியையும் பயன்படுத்தி ஒளிப்படங்களை எடுக்க முடியும். மேலும் திறன்பேசியில் ஒளி, ஒளிப்படத்தின் மூலம் சொல்ல முயற்சிக்கும் கதை மற்றும் ஒளிப்பட திருத்தம் போன்ற முக்கியமான கூறுகளைப் பற்றி அறிந்துகொள்வதன் மூலம் சிறந்த ஒளிப்படக் கலைஞராக மாறலாம்.[1] கடந்த சில ஆண்டுகளில், திறன்பேசி ஒளிப்படக் கலையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மிகப்பெரியவை, இன்று சந்தையில் உள்ள சக்திவாய்ந்த திறன்பேசிகளான கூகிள் பிக்சல் 2, ஐபோன் எக்ஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 போன்றவைகள் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளன. சாம்சங் எஸ்7 எட்ஜ், அழகாகத் தோற்றமளிக்கும் ஒளிப்படங்களை எடுக்க முடியும் என கூறப்படுகிறது, மேலும் குறைந்த வெளிச்சத்திலும் கூட சிறப்பாகச் செயல்படுவதாகவும், மேலும் இந்த வகை ஒரு திறன்மிக்க ஒளிப்படக்கருவியாக இருப்பதாக அறியப்படுகிறது.[2] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia