பாலுணர்வுசார் ஒளிப்படவியல்![]() பாலுணர்வுசார் ஒளிப்படவியல் (Erotic photography) என்பது, சிற்றின்பத்துக்குரிய பாலியல் உணர்வைத் தூண்டும் அல்லது பாலியலை தூண்டும் தன்மை கொண்ட ஒரு கலை வடிவ புகைப்பட பாணியாகும். மேலும் இந்தப் புகைப்பட வகையில் பெரும்பாலும் ஆடையற்ற ஒளிப்படத்திலிருந்து வேறுபடுகிறது. ஆபாசப் புகைப்படம் எடுத்தலில் பொதுவாக அது "ஆபாசமான" திசையில் நகர்கிறது, மேலும் கலை அல்லது அழகியல் மதிப்பு இல்லாததாக மதிப்பிடப்படுகிறது; இருப்பினும், கலைக்கும் ஆபாசத்திற்கும் இடையிலான கோட்டை, சமூக ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் விவாதிக்கப்படுகிறது, மேலும் பல புகைப்படக் கலைஞர்கள் இந்த வேறுபாடுகளை வேண்டுமென்றே புறக்கணிக்கும் படைப்புகளை உருவாக்கியுள்ளனர். சிற்றின்ப ஒளிப்படங்கள் பொதுவாக வணிக பயன்பாட்டிற்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன, இதில் அலங்கார நாட்காட்டிகள், பற்றார்வப்படங்கள், கூரைவீடுஇதழ், பிளேபோய் மற்றும் ஆண்கள் பத்திரிகைகள் போன்ற பெருமளவிலான தயாரிப்புகள் அடங்கும், ஆனால் பல கலைசார் ஒளிப்படக் கலைஞர்கள் விவரங்களுடனான சிற்றின்பப் படமெடுப்பதிலும் ஈடுபட்டுள்ளனர்.[1] தசாப்தத்தின்படி எடுத்துக்காட்டுகள்
மேலும் காண்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia